அவதார் 2 வெளியாவதில் சிக்கல்.... ரசிகர்கள் அதிர்ச்சி

அவதார் 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 1, 2022, 05:53 PM IST
  • அவதார் 2 டிசம்பர் 16ல் ரிலீஸ்
  • சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியானது
  • படமானது 160 மொழிகளில் வெளியாகிறது
அவதார் 2 வெளியாவதில் சிக்கல்.... ரசிகர்கள் அதிர்ச்சி title=

டைட்டானிக்,  டெர்மினேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான படம் அவதார். இப்படத்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் இப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்திருக்கிறது. இதனையடுத்து அவதார் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகளை கேமரூன் தொடங்கினார். ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

டால்பி ப்ரீமியம் 4k உடன் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகியிருக்கும் இப்படமானது உலகம் முழுவதும், 160 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி இதன் மூலம் அவதார் படத்துக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதையும் உலகம் உணர்ந்திருக்கிறது.

முதல் படமான “அவதார்” படத்தின் சம்பவங்களுக்கு பிறகு, ஒரு தசாப்த காலக்கட்டத்தை கடந்து , சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்னைகள், பாதுகாப்புடன் இருப்பதற்கு அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள் மற்றும் அவர்கள் அடையும்  துயரங்கள் அவர்களின் வெற்றி என இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இதன் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றனர். மேலும் படம் எப்போது வெளியாகும் திரையரங்குளில் சென்று எப்போது பார்ப்போம் என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் அவதார் 2 படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இப்படத்தை தமிழ் டப்பிங்கில் வெளியிடும் விநியோக நிறுவனம், திரையரங்குகளிடம் 70 சதவீத தொகையை கேட்பதாக, திரையரங்கு உரிமையாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளதால் இந்த சிக்கல் எழுந்திருக்கிறது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதர், இவ்விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க உள்ளதாக கூறினார். எனவே அவதார் 2 படம் எந்தவித சிக்கலுமின்றி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மேலும் படிக்க | வந்துட்டாருய்யா வந்துட்டாரு - பட்டையை கிளப்பும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ட்ரெய்லர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News