’வெந்து தணிந்தது காடு’ புத்தாண்டு பரிசாக அப்டேட் கொடுத்த கவுதம்மேனன்..!

'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக இயக்குநர் கவுதம்வாசுதேவ் மேனன் அறிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 31, 2021, 03:32 PM IST
’வெந்து தணிந்தது காடு’ புத்தாண்டு பரிசாக அப்டேட் கொடுத்த கவுதம்மேனன்..! title=

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தமிழில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் "வெந்து தணிந்தது காடு". (Vendhu Thanindhathu Kaadu)  விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மீண்டும் கௌதம் மேனன் - சிம்பு கூட்டணி இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

ALSO READ | அதிக வியூஸ் கொண்டு சாதனை படைத்த வெந்து தணிந்தது காடு டீசர்

இப்படத்தில் கயாடு லோஹர், ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். சிம்பு (Simbu) தனது உடல் எடையை குறைத்த பிறகு ஈஸ்வரன் மற்றும் மாநாடு போன்ற படங்களில் நடித்தார். அண்மையில் ரிலீஸான ‘மாநாடு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், சிம்புவுக்கும் திருப்புமுனையாக அமைந்தது. மாநாடு திரைப்படத்தின் சூட்டிங்கிற்கு பிறகு கவுதம் வாசுதேவ்மேனனுடன் இணைந்த சிம்பு, வெந்து தணிந்தது காடு படத்தில் பிஸியாக நடித்தார். ஏற்கனவே படத்தின் பெரும்பாலான சூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடர்பான அப்டேட்டை இயக்குநர் கவுதம்மேனன் வெளியிட்டுள்ளார்.

புத்தாண்டு பரிசாக வெளியிட்டுள்ள அப்டேட்டில், ஜனவரி 3ஆம் தேதி முதல் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாகவும், அதில் முத்துவின் பாவையான சித்திட்ஞானி (Siddhi idnani) நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். அவர் கொடுத்த அப்டேட்டில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவின் பெயர் முத்து என்பதும், ஹீரோயின் பெயர் பாவை என்பது தெரியவந்துள்ளது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசர் வெளியீடு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News