நடிகராக மாறிய இயக்குநர் வெற்றிமாறன்..! யார் படத்தில் நடிக்கிறார் தெரியுமா..?

தமிழ் இயக்குநர் வெற்றிமாறன், ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Dec 3, 2023, 05:54 PM IST
  • வெற்றிமாறன் டாப் தமிழ் இயக்குநர்களின் லிஸ்டில் உள்ளார்.
  • இவரை நடிக்க வைக்க பல இயக்குநர்கள் முயற்சிக்கின்றனர்.
  • வெற்றி, ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது.
நடிகராக மாறிய இயக்குநர் வெற்றிமாறன்..! யார் படத்தில் நடிக்கிறார் தெரியுமா..?  title=

கோலிவுட் இயக்குநர்களுள் ரசிகர்கள் மனங்களில் நச்சென்று பதியும் வகையில் படங்களை இயக்கியவர்களுள் ஒருவர், வெற்றிமாறன். இவர், ஒரு படத்தின் மூலம் நடிகராக மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வெற்றிமாறன்:

பெயருக்கு ஏற்றார் போலவே, தான் இயக்கிய படங்கள் அனைத்தையும் வெற்றிப்படங்களாக மாற்றியவர், வெற்றிமாறன். இவரது படங்கள் அனைத்துமே ரசிகர்களை கவர தவறியதில்லை. வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவன், அப்போதே பெரிய ஹீரோவாக இருந்த தனுஷின் வாழக்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அழுத்தமான, ஆழமான கருத்துகளை கூறும் படங்களை கொடுப்பதற்கு, தவறாத இயக்குநர் இவர். பாலு மகேந்திராவின் மாணவரான இவர், தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறார். 

நடிகராக மாறிய வெற்றி? 

இயக்குநர் வெற்றிமாறன், படங்களை இயக்குவதை தாண்டி தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இவரது தயாரிப்பின் கீழ் சில படங்கள் வெளியாகி வருகின்றன. மிஷ்கின் இயக்கும் டிரெய்ன் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். மேலும், ஈரா தயானந்த், நாசர், வினய், பவனா, பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கின்றனர். டிரெய்ன் படத்தின் படப்பிடிப்பு, கடந்த டிசம்பர் 1ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பித்தது. இந்த பூஜை விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். 

டிரெய்ன் படத்திடில் வெற்றிமாறன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் படக்குழுவின் தரப்பில் இருந்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், படத்தில் சர்ப்பரைஸ் எலிமெண்டாக இதை வைத்திருப்பனரோ என்றும் ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர். 

வெற்றிமாறனை நடிக்க வைக்க திட்டம் தீட்டியவர்கள்..

இயக்குநர் வெற்றிமாறனை தன் படத்தில் வில்லனாக நடிக்க வைக்க முயற்சித்ததாக பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே ஒரு நேர்காணில் தெரிவித்திருந்தார். லியோ படத்தில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்றதாகவும் ஆனால் வெற்றிமாறன் நடிக்க மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். அதே போல, இயக்குநர் அமீரும் வெற்றிமாறனை வைத்து ஒரு படத்தை இயக்க ஆசைபடுவதாகவும் தெரிவித்திருந்தார். அதற்கு வெற்றி, “எல்லாம் நல்லத்தான போய்க்கிட்டு இருக்கு..” என்று கூறினார்.

மேலும் படிக்க | இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ்? இயக்குனர் இவரா?

வெற்றிமாறன் பிறருக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கையில் அதைப்பார்த்து வியந்தவர்கள் பலர் இவரை நடிக்க வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நடிகராக மாறிய இயக்குநர்கள்..

தமிழ் சினிமாவில் உள்ள பல இயக்குநர்கள் தற்போது நடிகர்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக கௌதம் வாசுதேவ் மேனன் சமீப காலங்களில் வெளியான பல படங்களில் முக்கிய தோற்றத்தில் நடித்து விட்டார். எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக களமிறங்கி தற்போது சிறந்த வில்லனாக கலக்கி கொண்டிருக்கிறார். அமீர், ராம், சசிகுமார், சேரன், பார்த்திபன் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார். அதே போல விரைவில் வெளியாகவுள்ள ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி இயக்க வந்து நடிகர்களாக மாறியவர்களின் லிஸ்டில் விரைவில் வெற்றிமாறனும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | விடுதலை பார்ட் 2-க்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்! வெளியாவதில் சந்தேகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News