வெளியானது தாத்தா விஜய் சேதுபதி-யின் சீதக்காதி டிரைலர்.....

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி திரைப்படத்தின் டிரைலர் வெளியானது! 

Written by - ZEE Bureau | Last Updated : Nov 21, 2018, 11:35 AM IST
வெளியானது தாத்தா விஜய் சேதுபதி-யின் சீதக்காதி டிரைலர்.....

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி திரைப்படத்தின் டிரைலர் வெளியானது! 

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் திரையுலக வாழ்வில் 25-ஆவது திரைப்படமாக உருவாகி வரும் படம் சீதக்காதி. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் மூத்த நாடகக் கலைஞராக நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் இவருடன் அர்ச்சனா, ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோவிந்த் வஸந்தா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை 'பேஷன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது. முன்னதாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள அய்யா என்ற பாடலினை வெளியிட்ட படக்குழுவினர், கடந்த அக்டோபர் 17-ஆம் நாள் இப்படத்திற்கு தனிக்கை குழு U சான்றிதழ் அளித்துள்ளதாக அறிவித்தனர்.

இந்த படத்தின் போஸ்டர்களை ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்தனர். இப்படம் அடுத்த மாதம் இத்திரைப்படம் வரும் டிசம்பர் 20-ஆம் வெளியாவதாகவும் தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தின் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 

டிரைலர்: 

 

More Stories

Trending News