சூப்பர் டீலக்ஸ்! சென்சார் முடிந்தது! ரிசல்ட் இதுதான்!!

சூப்பர் டீலக்ஸ் படம் தணிக்கை குழுவிடம் சென்று A சான்றிதழை பெற்று வந்துள்ளது.

Updated: Mar 25, 2019, 09:04 AM IST
சூப்பர் டீலக்ஸ்! சென்சார் முடிந்தது! ரிசல்ட் இதுதான்!!

சூப்பர் டீலக்ஸ் படம் தணிக்கை குழுவிடம் சென்று A சான்றிதழை பெற்று வந்துள்ளது.

‘ஆரண்யக் காண்டம்’ திரைப்பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதல்முறையாக திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார்.

படத்தின் திரைகதை குறித்த தகவல்கள் ரகசியமாக காப்பாற்றப்பட்டு வருகின்றது. எனினும் விஜய் சேதுபதி ஷில்பா என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது மட்டும் அனைவரும் அறிந்த விஷயம்.

இந்த படம் வருகிற 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி பயங்கர டிரெண்டானது.

இந்நிலையில் இப்படம் தணிக்கை குழுவிடம் சென்று எந்தவொரு காட்சியையும் நீக்கப்படாமல் A சான்றிதழை பெற்று வந்துள்ளது. மேலும் இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 56 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.