கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆதாரம்’ டீசர்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆதாரம் படத்தின் டீசரை வெளியிட்டார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 7, 2022, 04:35 PM IST
  • ஆதாரம் படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார்
  • இயக்குநர் சீனு ராமசாமியும் பாராட்டியிருக்கிறார்
  • படத்தின் டீசர் கவனம் ஈர்த்திருக்கிறது
 கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆதாரம்’ டீசர்  title=

நம் கண் பார்க்கும் விஷயங்களில் விவரங்கள் குவிந்திருக்காது. அது எளிதில் மறந்து போகும் ஆனால் சிசிடிவியின் கண்கள், பாரத்த அனைத்தையும் சேமித்து வைக்கும் அது அழிந்து போகாது. இந்த கருவை மையமாக கொண்டு நகை கடை கொள்ளையின் பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம்தான்  “ஆதாரம்”.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் PS மித்ரன், ஒளிப்பதிவாளர் PG முத்தையா மற்றும் இயக்குநர் SR பிரபாகரன் வெளியிட்ட இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லப்படாத ஹெய்ஸ்ட் ஜானரில், காதல் கமர்ஷியல் அம்சங்கள் கலந்து, அனைவரையும் கவரும் வண்ணம் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் இந்த டீசரை பகிர்ந்து கவனம் ஈர்க்கும் டீசர் வாழ்த்துகள் என பாராட்டியுள்ளார். 

இப்படத்தில் புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் நாயகனாக நடிக்க, பூஜா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி,  Y.G.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

MATINEE FOLKS நிறுவனம் சார்பில்  G.பிரதீப்குமார், ஆப்ஷா  மைதீன் தயாரித்துள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநர் கவிதா இயக்கியுள்ளார். வசனங்களை கவிதா மற்றும் ராசி தங்கதுரை இணைந்து எழுதியுள்ளனர்.  N.S.ராஜேஷ் குமார் & ஶ்ரீவட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். டாய்ஸ்.M எடிட்டிங் பணிகள் செய்துள்ளார். 

மேலும் படிக்க | சர்தார் படத்தின் அசூர வசூல் - குதூகலத்தில் படக்குழு... குவியும் பாராட்டு!

மேலும் படிக்க | பிறந்தநாள் கொண்டாடுவதில் நம்பிக்கை இல்லை - கமல் ஹாசன்

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News