பிரபல பின்னணிப் பாடகியான சங்கீதா சஜித் உடல் நலக் குறைவால் இன்று காலை காலமானார்.
கேரளாவைச் சேர்ந்த பின்னணி பாடகியான சங்கீதா சஜித், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். சிறுவயது முதலே சங்கீதத்தில் ஆர்வம் கொண்டிருந்த சங்கீதா கர்நாடக சங்கீதமும் கற்றவர்.
தமிழில் தொடக்க காலத்தில் தேவா, சிற்பி, கீரவாணி, ஆதித்யன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்துள்ளார். முன்னணி இசை அமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
விருது நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அவர் அதில் கே.பி சுந்தராம்பாள் பாடிய பாப்புலர் பாடலான ‘ஞானப்பழத்தை பிழிந்து’ எனும் பாடலைப் பாடினார். இது அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிடித்துப் போனதாம். இதையடுத்து, அவர் இசையமைத்த மிஸ்டர் ரோமியோ எனும் படத்தில் பாட வாய்ப்பளித்தார்.
அதுதான் ‘தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை’ எனும் பாடல். அதன் பிறகு பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற ‘வாராயோ தோழி’ பாடலில் பாடல் தொடக்கத்தில் வரும் ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ எனத் தொடங்கும் வரிகளையும் அவர்தான் பாடினார்.
விருது நிகழ்ச்சி ஒன்றில் பாடி இருந்தாரே அதே பாடல்தான். இளையராஜா இசையமைத்த பழசிராஜா படத்தில் இடம்பெற்ற ‘ஓடத்தண்ணில் தாளம் கொட்டும்’ பாடலையும் இவர் பாடியுள்ளார்.
மேலும் படிக்க | ‘விஜய்- 67’ எப்படிப்பட்ட கதை?- லோகேஷ் கனகராஜின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!
சமீபத்தில் வந்த விஜய்யின் பிகில் படத்தில் இடம்பெற்று வெறித்தனமான ஹிட் அடித்த வெறித்தனம் பாடலிலும் இவரது பங்கு உண்டு. பாடலில் விஜய் பாடுவதற்கு முன்பாக மூதாட்டி பாடுவது போல இடம்பெற்றிருந்த ‘யாராண்ட’ எனத் தொடங்கும் வரிகளைப் பாடியதும் சங்கீதாதான். ஆனால் அந்தக் குரலைப் பார்த்த பலரும் அதை சங்கீதாதான் பாடியது எனச் சொன்னால் நம்புவது கடினம்தான். அந்த அளவுக்கு வித்யாசம் கொடுத்து அதனைப் பாடியிருப்பார்.
இந்நிலையில் சிறுநீரகப் பிரச்சினையால் அவதிப்பட்டுவந்த பாடகி சங்கீதா திருவனந்தபுரத்தில் உள்ள அவரது சகோதரி வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | ‘விக்ரம்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்- படம் வெளியாகுமா?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR