விஜய் 61-ல் இருந்து விலகிவிட்டாரா ஜோதிகா?

Last Updated : Feb 4, 2017, 04:32 PM IST
விஜய் 61-ல் இருந்து விலகிவிட்டாரா ஜோதிகா? title=

36 வயதினிலே படத்துக்குப் பிறகு, மீண்டும் மகளிர் மட்டும் என்ற படத்தில் நடித்து வரும் ஜோதிகா #Vijay61 -ல் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது அவர் விஜய் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் பரவிவந்தது.

இந்த நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் ஜோதிகாவையும் ஒரு நாயகியாக்க பேசினர். முதலில் ஒப்புக் கொண்ட ஜோதிகா, அட்லீயிடம் கதை கேட்டிருக்கிறார். தன் கேரக்டருக்கு சில மாறுதல்கள் செய்யுமாறு அட்லீயிடம் ஜோதிகா கேட்டுள்ளாராம், அதை செய்தால் தான் படத்தில் நடிப்பேன் என உறுதியாக கூறிவிட்டாராம். அதன் பிறகு ஜோதிகாவிடம் பேசவே இல்லையாம் அட்லீ. சமீபத்தில் தொடங்கிய படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புக்கும் ஜோதிகா வரவில்லை. அதான் ஜோ நடிக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் தொடர்கிறது.

அதனால் இயக்குனர் தற்போது ஜோதிகாவிற்கு பதிலாக வேறொரு ஹீரோயினை நடிக்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம்.

Trending News