மீண்டும் ஒரே மாதத்தில் வெளியாகும் விஜய்சேதுபதியின் 4 படங்கள்!

விஜய்சேதுபதி நடிப்பில் டிசம்பர் மாதம் 4 படங்கள் வெளிவர உள்ளன.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 18, 2021, 11:57 AM IST
மீண்டும் ஒரே மாதத்தில் வெளியாகும் விஜய்சேதுபதியின் 4 படங்கள்! title=

தமிழ் துறையில் குறுகிய காலத்தில் அனைவராலும் ரசிக்க பட்டவர் நடிகர் விஜய் சேதுபதி.  இவர் படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவார்.  விஜய் சேதுபதி தன் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார்.  கடந்த மாதத்தில் இடைவிடாமல் இவரது படங்களில் சில (லாபம், துக்ளக் தர்பார் , அனபெல் சேதுபதி போன்றவை ) ரிலீஸாகி எங்கு திரும்பினாலும் விஜய் சேதுபதியின் முகம் தெரியும் அளவிற்கு இருந்தது .  இப்போது மீண்டும் டிசம்பர் மாதத்தில் இவர் நடிப்பில் 4 படங்கள் வெளியாக இருக்கிறது .  

ALSO READ பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரபுதேவா - விஜய்!

1)கடைசி விவசாயி :

காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் "கடைசி விவசாயி".  இந்த படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரியதுள்ளது.  இதில் முதியவர் நல்லாண்டி கதாநாயகனாக நடித்துள்ளார்.  மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களாக விஜய் சேதுபதி, ராக்ஷி கண்ணா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படம் முழுக்க முழுக்க விவசாயத்தை மையப்படுத்தி உருவாக்கட்டுள்ளது .  இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் .  இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்கில் ரிலீசாக உள்ளது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

kv

2) காத்து வாக்குல ரெண்டு காதல் :

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி , நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் காதல் திரைப்படம் தான் "காத்து வாக்குல ரெண்டு காதல்".  விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவான இரண்டாவது படம் இதுவாகும்.  இந்த படத்திலுள்ள "டூ டூ டூ " பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .  இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் .  இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொரானா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் பணிகள் முடிக்கப்பட்டு வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது .

kvk

3) மும்பைக்கார் :

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் அதிரடி த்ரில்லர் படம் "மும்பைக்கார்".  இதில் விக்ராந்த் மெஸிஸி , தான்யா , சஞ்சய் மிஸ்ரா உழைத்த பலர் நடித்துள்ளனர்.  லோகேஷ் கனகராஜின் முதல் தமிழ் படமான மாநகரம் படத்தின் ரீமேக்தான் இந்த மும்பைக்கார்.  இதில் முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.  இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.  இப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார் .  இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ளது .

4) யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் :

வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.  இதில் மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி ,விவேக் , மோகன் ராஜா, ரித்விகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  இந்த படத்திலிருந்து வெளியான "முருகா" பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.  இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.  இந்த வருகிற படம் டிசம்பர் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது என படக்குழு அறிவித்துள்ளது .

ALSO READ தேவதை அவள் ஒரு தேவதை! நயன்தாராவின் வாழ்க்கையை மாற்றிய 6 படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News