"விஐபி 2" படத்தின் புது போஸ்டர் வெளியீடு!

Last Updated : Jun 5, 2017, 04:28 PM IST
"விஐபி 2" படத்தின் புது போஸ்டர் வெளியீடு! title=

தனுஷ் நடிக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் புதிய போஸ்டர் மற்றும் போஸ்டரில் அந்த படத்தின் டீசர் தேதி வெளியிடப்பட்டது.

தனுஷ் நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'வேலையில்லா பட்டதாரி'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'வேலையிட்டா பட்டதாரி 2' படம் சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி பலர் நடிக்கும் இப்படத்தை ஒண்டர்பார் நிறுவனம், தாணு இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் தமிழ், தெலுங்கு டீசர் ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என தனுஷ் டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

 

Trending News