சுரேஷ் சக்ரவர்த்தியுடன் ஜூலி எடுத்துக்கொண்ட வைரல் போட்டோ! இது எப்போ?

ஒரு தனியார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது வெற்றிகரமாக நகர்ந்து வருகிறது. 

Last Updated : Nov 26, 2020, 03:00 PM IST
சுரேஷ் சக்ரவர்த்தியுடன் ஜூலி எடுத்துக்கொண்ட வைரல் போட்டோ! இது எப்போ?

ஒரு தனியார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது வெற்றிகரமாக நகர்ந்து வருகிறது. இந்த சீசனில் சுரேஷ் சக்கரவர்த்தியும் ஒரு போட்டியாளராக கடந்துகொண்டு வந்தார். 

ஆரம்பத்தில் இவரை அனைவருமே ஒரு டெரரான பீஸ் என்று நினைத்தார்கள். அதேபோல இவர் இந்த சீசன் வனிதா என்றும் பலரும் விமர்சித்து வந்தார்கள். ஆனால் போகப்போக இவர் செய்யும் சேட்டைகளை பார்த்து இவருக்கு என்று ஒரு தனி ஆர்மியே அமைந்துவிட்டது. 

ALSO READ | கடற்கரை மணலில் நிர்வாணமாக படுத்தபடி போஸ் கொடுத்த பிக்பாஸ் புகழ் ஜூலி!!

அதேபோல தான் செய்யும் தவறுகளை மிகவும் நேர்மையாக ஒப்புக் கொள்கிறார் இதனாலேயே இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகிறது. சுரேஷும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தான். இவர் விசு, எஸ் பி பி என்று பல்வேறு ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார்.

இவர் தனது 19 வயதிலேயே ராமா நாயுடுவின் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் புது நகைச்சுவை நடிகரா அறிமுகமானார். அந்த படத்தில் எஸ் பி பியும் நடித்திருந்தார்.அதன் பின்னர் தமிழில் ஜி.வியின் தயாரிப்பில், கே.சுபாஷ் இயக்கத்தில் “வாக்குமூலம்” என்றபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த சுரேஷ் சக்கரவர்த்தி தனது யூடுயூப் சேனலில் சமையல் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சுரேஷ் சக்கரவர்த்தி ஜூலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்:

 

ஜல்லிகட்டு போராட்டத்தை தொடர்ந்து, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி. இதை அடுத்து  இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதை தொடர்ந்து, பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

 

ALSO READ | மூளை அறுவை சிகிச்சையின் போது Bigg Boss பார்த்துக்கொண்டு விழித்திருந்த நோயாளி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News