மூளை அறுவை சிகிச்சையின் போது Bigg Boss பார்த்துக்கொண்டு விழித்திருந்த நோயாளி

இடது பிரீமோட்டர் பகுதியில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்த குளியோமாவை மருத்துவர்கள் அவரது மூளையிலிருந்து அறுவை சிகிச்சை செய்து அகற்றியபோது, ​​வர பிரசாத் என்ற அந்த நோயாளி பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அவதார் படத்தையும் லேப்டாப்பில் கண்டு களித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2020, 12:04 PM IST
  • மூளையில் அறுவை சிகிச்சை செய்யும்போது, நோயாளி உறங்காமல் விழித்திருப்பது இப்போது பொதுவானதாகி விட்டது.
  • பிக் பாஸ் மற்றும் அவதார் படம் பார்த்துக்கொண்டு ஒருவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
  • நோயாளி விழித்திருக்க வேண்டும் என்பதுதான் இந்த வகை சிகிச்சைகளின் முக்கிய அம்சம்.
மூளை அறுவை சிகிச்சையின் போது Bigg Boss பார்த்துக்கொண்டு விழித்திருந்த நோயாளி title=

மருத்துவத் துறை பல முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் கண்டு வருகிறது. முன்னர் மிக கடினமானதாகக் கருதப்பட்ட பல சிகிச்சை முறைகள் இப்போது மிக எளிமையாகி விட்டன. மூளையில் அறுவை சிகிச்சை செய்யும்போது, நோயாளி உறங்காமல் விழித்திருப்பதும், ஏதாவது ஒரு நடவடிக்கையில், தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும் இப்போது பொதுவானதாகிவிட்டது. 

அறுவை சிகிச்சையின் போது, நோயாளிகள் முழுமையாக விழித்துக் கொண்டு பாடுவது, கிட்டார் அல்லது வயலின் வாசிப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுவதை நாம் கண்டிருக்கிறோம்.

ஒரு சமீபத்திய நிகழ்வில், 33 வயதான ஒரு நோயாளி, மருத்துவர்கள் அவரது மூளையில் அறுவை சிகிச்சையை (Brain Surgery) செய்யும் போது விழித்திருக்க,  ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் மற்றும் ஹாலிவுட் அறிவியல் திரைப்படமான ‘அவதார்’ ஆகியவற்றை பார்த்துக்கொண்டிருந்தார் என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் ஆந்திராவின் குண்டூரில் நடந்தது. அந்த நபருக்கு ஒரு மிகவும் சிக்கலான நரம்பியல் அறுவை சிகிச்சையை மருத்துவ நிபுணர்கள் செய்தார்கள். அப்போது நோயாளி உறங்காமல் விழித்துக்கொண்டிருப்பது மிகவும் முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் இருந்தது.

இடது பிரீமோட்டர் பகுதியில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்த குளியோமாவை மருத்துவர்கள் அவரது மூளையிலிருந்து அறுவை சிகிச்சை செய்து அகற்றியபோது, ​​வர பிரசாத் என்ற அந்த நோயாளி பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அவதார் படத்தையும் லேப்டாப்பில் கண்டு களித்தார்.

முன்னதாக, பிரசாதுக்கு 2016 ஆம் ஆண்டிலும் ஹைதராபாத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், அவர் அப்போது முழுவதுமாக குணமடையவில்லை.

ALSO READ: COVID தொற்றால் இறந்து, தகனம் செய்யப்பட்ட மனிதர் வீடு திரும்பிய அதிசயம்

அவர் குணமடைந்த பின்னர் சனிக்கிழமை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

அவேக் ப்ரெயின் சர்ஜரி என்பது நோயாளி விழித்திருக்கும் போது மூளையில் செய்யப்படும் ஒரு வகை செயல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது மூளையின் செயல்பாடுகளில் மருத்துவர்கள் தலையிடும் போது நோயாளிகள் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதை கண்காணிக்க மருத்துவர்களை அனுமதிக்கிறது. அறுவை சிகிச்சையின் போது நோயாளியை ஈடுபாட்டுடன் வைத்திருப்பதுதான் இதில் முக்கிய அம்சமாக உள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம், 60 வயதான இத்தாலிய பெண் ஒருவர், அவரது மூளைக் கட்டியை அகற்ற அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தபோது, ஒரு மணி நேரத்திற்குள் 90 ஸ்டஃப்ட் ஆலிவ்களை தயாரித்தார். அந்தப் பெண் ஆலிவ்களைப் பிரித்து, இறைச்சி மற்றும் பாலாடைக்கட்டி கொண்டு அவற்றை அடைத்து, பின்னர் அவற்றை கவனமாக ரொட்டி துண்டுகள் மீது உருட்டி, 90 ஸ்டஃப்ட் ஆலிவ் துண்டுகளை ஒரு மணி நேரத்திற்குள் தயார் செய்தார்.

ALSO READ: ஒரே இரவில் கோடீஸ்வரன்: கூரையைப் பிய்த்துக்கொண்டு விழுந்த அதிர்ஷ்டம் என்ன தெரியுமா….

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News