வலிமையுடன் போட்டிபோட தயாராகும் விஷால் படம்!

அஜித்தின் 'வலிமை' படத்துக்கு போட்டியாக, விஷால் நடிக்கும் 'வீரமே வாகை சூடும் ' படம் ரிலீசாகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 3, 2022, 04:26 PM IST
  • வீரமே வாகை சூடும் படத்திற்கு தினோராவது முறையாக விஷால் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
  • இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதியன்று இப்படம் ரிலீசாகும் என்று பேசப்பட்டு வந்தது.
வலிமையுடன் போட்டிபோட தயாராகும் விஷால் படம்! title=

அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் (vishal) நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம்  'வீரமே வாகை சூடும் '. இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கிறார்.  இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதியும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும், யோகிபாபு நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளனர்.  மேலும் இதில் மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பில்லி முரளி, ரவீனா மற்றும்  கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ALSO READ | உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு இசை அமைக்கும் AR ரஹ்மான்?

இந்த படத்தையும் சேர்த்து பதினோராவது முறையாக விஷால் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  விஷால் 31 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'வீரமே வாகை சூடும் ' என்று அதிகாரபூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டது.  இப்படத்தின் பர்ஸ்ட்  சிங்கிள் கடந்த சில வாரங்களுக்கு ரிலீசானது.  இதனையடுத்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கும் இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் விரைவில் வெளியாகுமென்றும் அறிவித்துள்ளார்.  மேலும் இப்படம் கடந்த ஆண்டு டிசமபர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடையாததன் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.  

vishal

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதியன்று இப்படம் ரிலீசாகும் என்று பேசப்பட்டு வந்த நிலையில், இப்படம் அஜித் நடிக்கும் 'வலிமை' (valimai) படத்துடன் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே 2014-ல் விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' பட ரிலீஸின் போது, விஷால் நடித்த 'பூஜை' படம் ரிலீசான நிலையில், தற்போது அஜித் படத்துடன் விஷால் படம் போட்டியிட உள்ளது.

ALSO READ | விஷாலுக்காக யுவன் பாடிய பாடல்! விரைவில் ரிலீஸ்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News