இசையமைப்பாளர்கள் விவேக் & மெர்வினின் புதிய பாடல் வெளியீடு எப்போது? அறிவிப்பு இதோ..

Vivek Mervin New Song Release : ‘ஒரசாத’ பாடல் புகழ் விவேக் மற்றும் மெர்வின் புதிய பாடல் ஒன்றை வெளியிட உள்ளனர். இந்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

Written by - Yuvashree | Last Updated : Mar 11, 2024, 07:14 PM IST
  • ஒரசாத பாடல் பாடி புகழ் பெற்ற விவேக்-மெர்வின்
  • புதிய பாடலின் அறிவிப்பு வெளியானது?
  • எப்போது வெளியாகிறது தெரியுமா?
இசையமைப்பாளர்கள் விவேக் & மெர்வினின் புதிய பாடல் வெளியீடு எப்போது? அறிவிப்பு இதோ.. title=

Vivek Mervin New Song Release : இசையமைப்பாளர்கள் விவேக் & மெர்வினின் விஎம் ஒரிஜினல்ஸ் (VM Originals) தொடர் அற்புதமான தனியிசை பாடல்களுடன் இசை ஆர்வலர்களை கவர வருகிறது!

தனியிசை தமிழ் இசை உலகில் இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் முன்னணியில் உள்ளனர். தனியிசை இசைத்துறையில் மட்டுமல்லாது, திரைப்பட இசைத்துறையிலும் தங்கள் தனித்துவமான இசையால் பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர். இசை ஆர்வலர்கள் மத்தியில் அவர்களின் தனித்துவமான இசை பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவர்களின் இசைத் தொடரான விஎம் ஒரிஜினல்ஸை இப்போது அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இதில் 5 சிறந்த பாடல்களின் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. சென்னையைச் சேர்ந்த இளம் பாடகர்களான சிவாங்கி, ஹர்ஷவர்தன், நித்யஸ்ரீ வெங்கடராமன், ஆதித்யா ஆர்.கே, மற்றும் எம்.எஸ். கிருஷ்ணா ஆகியோர் இதில் பாடியுள்ளனர். 

மேலும் படிக்க | வருங்கால கணவரை கலாய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி! என்ன சொன்னார் தெரியுமா?

திறமையான இசைக்கலைஞர்களுடன் இணைந்து இந்தப் பாடல்கள் நேரடி நிகழ்ச்சி (live performances) வாயிலாக பார்வையாளர்களை கவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் சிங்கிள் மார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து 15 நாள் இடைவெளியில் அடுத்தடுத்தப் பாடல்கள் வெளியாகும்.

இந்தத் தொடரின் அனைத்து பாடல்களும் பல்வேறு இசை ஜானர்களை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் விவேக் மற்றும் மெர்வின் அவர்களால் சிறப்பாக இசையமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன. விஎம் ஒரிஜினல்ஸ் உடன் மறக்க முடியாத இசை அனுபவத்திற்காக காத்திருங்கள்.

மேலும் படிக்க | ஆஸ்கர் சர்ச்சைகள்: ஒவ்வாெரு வருடமும் ஒவ்வொரு பஞ்சாயத்து..இந்த வருடம் என்ன ஆச்சு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News