செம்பருத்தி தொடரில் இனி கார்த்திக்கு பதில் இவரே! ரசிகர்கள் அதிர்ச்சி!

ஜீ தமிழில் பிரபலமான சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இந்த நிகழ்ச்சியில் ஆதித்யா புருஷோத்தமன் வேடத்தில் நடித்திருந்த நடிகர் கார்த்திக் ராஜ் மாற்றப்படுகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2020, 08:45 AM IST
செம்பருத்தி தொடரில் இனி கார்த்திக்கு பதில் இவரே! ரசிகர்கள் அதிர்ச்சி! title=

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல். 

டாப் சீரியல்களில் செம்பருத்தி (Sembaruthi) சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் (Zee Tamilதொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் இந்த பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், அவருக்கு ஜோடியாக ஆபிஸ் புகழ் கார்த்தியும் நடிக்கின்றனர்.

ALSO READ | Zee Tamil இன் செம்பருத்தி சீரியலில் இருந்து காரத்திக் நீக்கம்?

தற்போது 800 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் ஹீரோ கார்த்திக் (Karthik Raj) தானாகவே வெளியேறியுள்ளார். இது தொடர்பாக ஜீ தமிழ் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது ஆதித்யா புருஷோத்தமன் வேடத்தில் வி.ஜே. அக்னி நடிக்கயுள்ளார். இந்த செய்தி கார்த்திக் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | Zee Tamil இல் புதிய கேம் ஷோ....‘Super Family’ விரைவில் திரையிடப்பட உள்ளது....

Trending News