Zee Tamil இன் செம்பருத்தி சீரியலில் இருந்து காரத்திக் நீக்கம்?

'செம்பருத்தி' தொடரில் நடித்து வரும் கார்த்திக், சமீபத்தில் ஜீ தமிழ் சேனலின் ஓடிடி தளமான ஜீ 5 தயாரித்த 'முகிலன்' என்ற வெப் சீரிஸிலும் நடித்து வந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2020, 02:09 PM IST
Zee Tamil இன் செம்பருத்தி சீரியலில் இருந்து காரத்திக் நீக்கம்? title=

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல். 

டாப் சீரியல்களில் செம்பருத்தி (Sembaruthi) சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் இந்த பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், அவருக்கு ஜோடியாக ஆபிஸ் புகழ் கார்த்தியும் நடிக்கின்றனர்.

ALSO READ | Zee Tamil இல் புதிய கேம் ஷோ....‘Super Family’ விரைவில் திரையிடப்பட உள்ளது....

தற்போது 800 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் ஹீரோ கார்த்திக் தானாகவே வெளியேறி இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியானது. கார்த்திக்கின் இந்த திடீர் நீக்கத்துக்கான காரணம் குறித்து உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்ல என்கிறார்கள். 

செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் வெளியேறுவதாக வெளியான தகவலை அடுத்து செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஜீ தமிழ் (Zee Tamil) விளக்கம் அளிக்காமல் மவுனம் சாதித்து வந்தது. 

இந்நிலையில் கார்த்தி செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட்டதை உறுதி செய்யும் விதமாக ஜீ தமிழ் தொலைக்காட்சி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 

ALSO READ | `ஜீ தமிழ்’ தொலைக்காட்சி புத்தம் புதிய தொடர்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News