கார்த்திகை தீபம்: ஆனந்த் செய்து கொடுத்த சத்தியம்.. தீபாவுக்காக அதிரடி காட்டிய கார்த்திக்

Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 6, 2024, 01:18 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்திகை தீபம்: ஆனந்த் செய்து கொடுத்த சத்தியம்.. தீபாவுக்காக அதிரடி காட்டிய கார்த்திக்  title=

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆனந்த் சூசைட் அட்டென்ட் பண்ண ரியாவை ஹாஸ்பிடலில் சென்று சந்திக்க அவள் உங்களுக்கு மீனாட்சியுடன் கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சும் உங்க வாழ்க்கைல வந்தது என்னுடைய தப்பு தான் அதனால தான் நான் என் வாழ்க்கையை முடிச்சுக்க முடிவெடுத்தேன் என்று சொல்கிறான். 

இதை கேட்ட ஆனந்த் இல்ல நான் உன்னை பார்க்க வந்திருக்கணும் என் மேல தான் தப்பு என்று சொல்லி நான் உன்னுடைய ஆசைப்படியே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என சத்தியம் செய்து கொடுக்கிறான். 

மறுபக்கம் தீபாவை பற்றி தவறான செய்தியை போட்ட பத்திரிக்கை ஆபீஸ்க்கு வரும் கார்த்திக் எதை வச்சு இந்த செய்தியை போட்டீங்க என்று சத்தம் போட மேனேஜர் எடிட்டரை கூப்பிட்டு கேட்கும் போது போட்டோவோட செய்தி வந்திருந்தது அதனால் தான் போட்டதாக சொல்கிறார். ஒரே ஒரு போட்டோவை வச்சி தீர விசாரிக்காமல் எப்படி இப்படி நியூஸ் போடலாம் என்று மேனேஜர் சத்தம் போடுகிறார். 

மேலும் படிக்க | திரைப்படமாக ஒளிபரப்பாகும் அயலி வெப்தொடர்.. ஜீ தமிழ் கொடுத்த செம அப்டேட்

உடனே கார்த்திக் தீபாவ பத்தி போட்ட இந்த செய்தி தப்புன்னு மன்னிப்பு கேட்டு நீங்க இன்னொரு செய்தி போடணும் இல்லனா நான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்ட பத்திரிக்கை ஆபிஸில் மன்னிப்பு செய்தி வெளியிட ஒப்புக் கொள்கின்றனர். 

அதை தொடர்ந்து தர்மலிங்கம் மற்றும் ஜானகி இருவரும் நகை கடைக்கு சென்று தீபாவிற்காக ஒரு தங்க நகையை வாங்கிக் கொண்டு அபிராமி வீட்டிற்கு வந்து கொடுக்க அபிராமி நாங்க யாரும் இதை எதிர்பார்க்கலையே அப்படி இருக்கும்போது எதற்கு இதை வாங்கிட்டு வந்தீங்க என்று கேட்க தர்மலிங்கம் எனக்கும் என் பொண்ணுக்கு சீர் செய்யணும்னு ஆசை இருக்கும் இல்லையா என்று சொல்ல கார்த்திக் அதெல்லாம் எதுக்கு மாமா என்று சொல்கிறான்.

இருந்தாலும் தன்னுடைய ஆசைக்காக வாங்கிக்குமாறு தீபாவிடம் கொடுக்க தீபா தயங்கி நிற்க மாப்ள நீங்க சொன்னா தான் தீபா வாங்கிப்பா என்று சொல்லி அதை தீபாவிடம் கொடுக்கிறார். ராஜேஸ்வரி உங்க பொண்ணுக்கு சீர் செய்யறதுக்கு கூட நாங்க சொல்லி தான் செய்ய வேண்டியதா இருக்கு, அப்புறம் உங்க பொண்ணுக்கு ஏதோ மியூசிக் டைரக்டரோட தொடர்பு இருக்காமே என்று அவமானப்படுத்தி பேசுகின்றனர். 

தர்மலிங்கம் அது தப்பான செய்தியா இருக்கும் என்று சொல்ல கார்த்திக் ஆமா மாமா அது தப்பான செய்தி தான். இன்னைக்கு சாயங்காலமே அதே பத்திரிக்கையில் தீபா பற்றிய செய்தி தப்புன்னு மன்னிப்பு செய்தி வெளியாகும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ராம்சரணுடன் இணைந்து நடிக்கும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News