அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதா காலில் விழும் அன்னம்.. நடந்தது என்ன?

Amudhavum Annalakshmiyum: அமுதா காலில் விழுந்த அன்னம்.. சரிந்து விழுந்த சிதம்பரம், நடந்தது என்ன..அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 7, 2023, 12:34 PM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதா காலில் விழும் அன்னம்.. நடந்தது என்ன? title=

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வடிவேலு அமுதா தன்னை அடித்து விட்டதாக டிராமா போட்ட நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: சீதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. மதுமிதாவின் நிலை என்ன?

அதாவது, வடிவேல் வீட்டிற்கு வந்து அன்னத்திடம் நான் மன்னிப்பு கேட்டது பத்தாதாம், நீயும்  வந்து அண்ணி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டுமாம் அப்பதான் அண்ணி தன் கோபத்தை விட்டு வீட்டுக்கு வருவார்களாம், ஊர் மத்தியில் கோவிலில் இப்படி போயி உக்காருவது நல்லா இல்லை நம்ம குடும்பத்துக்கு அசிங்கம், அதனால் நீ வந்து அவங்க காலில் விழுந்து மன்னிப்பு கேளு இல்லை என்றால் நம்ம குடும்பம் அசிங்கப்படும் என நல்லவன் போல சொல்கிறான்.

மறுபக்கம் மாணிக்கமும் செந்திலும் சிதம்பரத்தை பார்த்து அவரிடம் நடந்த எதையும் மனசுல வச்சுக்காதீங்க, அங்க நடந்த விசயத்துக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் என அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவர் சரிந்து விழ, அப்போது வெளியே இருந்து வந்த இளங்கோ நாகு பதறி போய் ஹாஸ்பிடலுக்கு தூக்கி செல்கின்றனர்.

பிறகு வடிவேல் அன்னத்திடம் நீ நம்ம குடும்பத்தை பத்தி மட்டும் யோசி, வேற எதையும் யோசிக்காத என அவளை ஏற்றி விடுகிறான். மேலும் அன்னத்தை எப்படியாவது அவ காலில் விழ வைத்துவிட்டாள் அதை வைத்து அமுதாவை காலி பண்ணிவிடலாம் என யோசிக்கிறான்.

இதனை தொடர்ந்து அன்னம் கோவிலுக்கு வந்து அமுதாவை பார்த்து கெஞ்ச அமுதா எதையும் பேசாமல் அமைதியாக இருக்க, நான் வடிவேலுவை தடுக்காமல் விட்டது தவறு தான், என்னை மன்னித்துவிடு என்றபடி அமுதா காலில் விழ ஊர் காரரர்கள் அனைவரும் இதை பார்த்து விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: மாப்பிள்ளையாக மாறும் ஷண்முகம்! கல்யாணம் இப்போ தேவையா? கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News