நேபாளத்தில் இந்திய தூதரகம் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு!

நேபாளம் காத்மண்டுவில் இந்திய தூதரகம் முகாம் அலுவலகம் அருகே குண்டுவெடித்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Updated: Apr 17, 2018, 09:58 AM IST
நேபாளத்தில் இந்திய தூதரகம் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு!

காத்மாண்டு பிர்த்நகர் உள்ள இந்திய தூதரகத்தின் முகாம் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே சக்தி குறைந்த வெடிகுண்டு வெடித்துள்ளது.

இதனால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் வெடி குண்டை வைத்துவிட்டு சென்றதாக நேபாள நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பிரத்நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து எதுவும் வெளியிடவில்லை.