அமீரகத்தின் 51ஆவது தேசிய தினம் - ரத்த தானம் வழங்கிய தேமுதிக

ஐக்கிய அரபு அமீரகத்தின் 51ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு தேமுதிகவின் அமீரக கிளை சார்பாக ரத்ததானம் வழங்கப்பட்டது.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 5, 2022, 12:42 PM IST
  • அமீரகத்தின் தேசிய தின விழா கொண்டாடப்படுகிறது
  • இதனையொட்டி அந்த நாடு விழாக்கோலம்
  • தேமுதிகவின் அமீரக கிளை சார்பில் ரத்த தானம்
அமீரகத்தின் 51ஆவது தேசிய தினம் - ரத்த தானம் வழங்கிய தேமுதிக title=

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏகப்பட்ட தமிழர்கள் இருக்கின்றனர். தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் பெரும்பாலும் உதவுகிறது என்றே கூறலாம். அந்த அளவுக்கு அந்நாட்டில் தமிழர்கள் குவிந்திருக்கின்றனர். இங்கிருந்து வேலைக்கு அங்கு செல்வதோடு மட்டுமின்றி தங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான நாள்களை அங்கேயே கழித்தவர்களும் உண்டு. இப்படி தமிழர்களோடு நெருங்கிய தொடர்புடைய அமீரகத்தின் 51ஆவது தேசிய தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனையொட்டி அந்நாடு விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

இந்நிலையில் அமீரகத்தின் 51ஆவது தேசிய தின விழாவை முன்னிட்டு துபாயில் இருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அமீரக கிளையின் சார்பில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

இந்த முகாமில் முன்னாள் துணை செயலாளர் தவசி முருகன் தலைமையில் அமீரக பிரிவு துணை செயலாளர்கள் அம்ஜத் அலி, சாகுல் ஹமீது மற்றும் முன்னாள் துணை செயலாளர் சகிலன், அமீரக பிரிவு பொருளாளர் வாகை சதீஷ், இளைஞரணி செயலாளர் ராஜசேகர், நைனா யாஸ்மீன், சகாப்தம் மணி, நாகராஜ், கரிகாலன், ராமநாதபுரம் செந்தில், விஜய், தீபக், அருண் உள்ளிட்ட ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க | இலங்கை தமிழர்களுக்கு ரணில் விக்ரமசிங்கே வைத்திருக்கும் கோரிக்கை

மேலும் படிக்க | காங்கேசன்துறை துறைமுக வளர்ச்சி - இந்தியா கொடுத்த கடன்

மேலும் படிக்க | அஜ்மானில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர் சந்திப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News