அஜ்மானில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர் சந்திப்பு

சவுதி அரேபியா நாட்டின் அஜ்மானில் உள்ள ஹமிதியா பூங்காவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினரின் வருடாந்திர சந்திப்பு நடைபெற்றது.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 2, 2022, 08:23 PM IST
  • சவூதி அரேபியாவில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
  • திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் சந்தித்துக்கொண்டனர்
  • உரி அடித்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடந்தன
அஜ்மானில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர் சந்திப்பு title=

திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் தலைவர் பூதமங்கலம் முஹம்மது ஜியாவுதீன் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் மிக அதிக அளவில் முன்னாள் மாணவர்கள் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள குளோபல் அலுமினி பிளாக் என்ற புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிக்கு அமீரக முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு கணிசமாக இருக்கும் வகையில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

பொதுச்செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். அப்போது பேசிய் ஆவர், இந்த வருடாந்திர நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கல்லூரியின் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு அமீரகத்திலும் நடக்க வேண்டும். மேலும் கல்லூரியில் படித்து வரும் வசதியற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இறைவசனங்கள் ஒதப்பட்டது. கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர்கள் முனைவர் பேராசிரியர் பீ.மு. மன்சூர், முனைவர் பேராசிரியர் பி.என்.பி. முஹம்மது சஹாபுதீன், கணினி அறிவியல் துறையின் துணைப் பேராசிரியை எஸ். பிரபாவதி பர்சேஸ் துறையின் அலுவலர் பி. வில்லி ஜான்சன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய முனைவர் பேராசிரியர் பீமு மன்சூர்,  அமீரகத்தில் கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் இந்த வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியில் விடுதியில் சந்திப்பது போன்றதொரு நினைவை ஏற்படுத்துகிறது. இதுவரை நான் பார்த்ததில் இந்த நிகழ்வு மிகப்பெரிய சந்திப்பாக அமைந்திருப்பது மன நிறைவை அளிக்கிறது என்று பேசினார்.

மேலும் படிக்க | சிங்கப்பூரில் விமரிசையாக நடந்த கண்ணதாசன் விழா

முனைவர் பேராசிரியர் பி.என்.பி. முகம்மது சகாபுதீன் தனது உரையில், ஒழுக்க கல்வியின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். மேலும் கணினி அறிவியல் துறையின் துணைப் பேராசிரியை எஸ். பிரபாவதி தனது உரையில் அமீரக முன்னாள் மாணவர்கள் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பணிகளுக்கு உதவி வருவது சிறப்புக்குரியது என்றார்.  நிகழ்ச்சியில் உரி அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News