வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு சேவைகளை தொடங்கும் SIB வங்கி

சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட் (SIB) வங்கியின் பிரதிநிதி அலுவலகம் 2018ம் ஆண்டு முதல் புர் துபாயில் உள்ள வங்கி தெருவில் இயங்கி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 4, 2022, 02:07 PM IST
  • 2021-22 ஆம் ஆண்டில், நிர்ணயித்த ரூ.20 பில்லியனுடன் ஒப்பிடுகையில், வளர்ச்சி இந்த நிதியாண்டில் ரூ.16-17 பில்லியனாக உள்ளது.
  • அந்நிய செலாவணி முன்பதிவு திட்டம்.
  • பரஸ்பர நிதிகள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் ஆன சேவை.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு சேவைகளை தொடங்கும் SIB வங்கி title=

சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட் (SIB) விரைவில் வளைகுடாவில் வசிக்கும் இந்தியர்களுக்காக சிறப்பு சேவைகளை தொடங்கும் என்று வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி துபாயில் தெரிவித்தார்.

 புதிய வாடிக்கையாளர்களை  ஈர்க்கும் வகையில்,  வாடிக்கையாளரின் அதிகரித்து வரும் தேவைகளை மையமாகக் கொண்டு செயல்படும் என தெரிவித்த, தனியார் துறை வங்கியின் நிர்வாக இயக்குனரான முரளி ராமகிருஷ்ணன்,  செல்வ மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து செல்வ மேலாண்மை சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் சேவைகளை விரிவுபடுத்தும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் தற்போது எங்கள் NRI வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு, வீடு மற்றும் வாகனக் கடன்களைப் பெறுவதற்கும், பரஸ்பர நிதிகள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் ஆன சேவைகளை வழங்குகிறோம்.  என்றார். மேலும், "கூடுதல் சேவைகள் மூலம், நாங்கள் NRI களுக்கு ஒரு முழுமையான தீர்வை வழங்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம்." என கூறினார்.

SIB வங்கியின் பிரதிநிதி அலுவலகம் 2018 முதல் புர் துபாயில் உள்ள வங்கி தெருவில் இயங்கி வருகிறது. NRI வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள NRE வங்கி சேவைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய அனைத்து தகவல்களுக்கும் இந்த அலுவலகத்தை அணுகலாம் என்று வளைகுடா பயணத்தில் இருந்த ராமகிருஷ்ணன் கூறினார்.

மேலும் படிக்க |  ஐக்கிய அரபு அமீரகத்தில் 'இலவச' தங்க நாணய சலுகைகளை வழங்கும் நகை விற்பனையாளர்கள்

SIB வங்கியின் புதிய திட்டங்களில் ஒன்று FCNR (foreign currency non-resident) பிளாட்டினம் வைப்புத் திட்டம் ஆகும், இது பல்வேறு நாணயங்களில் கிடைக்கும் அந்நிய செலாவணி முன்பதிவு திட்டம் ஆகும். இத்திட்டம் NRE வைப்புத்தொகையை விட சிறந்த வட்டி வருமானத்தை வழங்குகிறது. ஜப்பானிய யெனில் உள்ள ஐந்தாண்டு FCNR பிளாட்டினம் NRE வைப்புத்தொகையுடன் ஒப்பிடும்போது 7.38 சதவிகிதம் வட்டியை வழங்குகிறது. இது 6.67 சதவிகிதம் வருடாந்திர வட்டியை வழங்குகிறது எனவும் ராமகிருஷ்ணன் கூறினார்.

வங்கியின் நெருக்கடியான காலங்கள் முடிவடைந்து, தற்போது வளர்ச்சி பாதையில் செல்கிறது என தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.  எனினும் இரட்டை இலக்க வளர்ச்சி  என்ற இலக்கை நிர்ணயித்த போதிலும்,  நிதியாண்டு 2021-22 ஆம் ஆண்டில்,  நிர்ணயித்த ரூ.20 பில்லியனுடன் ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டில் ரூ.16-17 பில்லியனாக உள்ளது எனவும், அதனை சீர் செய்ய திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும் கூறினார்.

உக்ரைன் போரின் பொருளாதார தாக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு.  வங்கி அதன் மூலோபாயத்தை மறுசீரமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு முழுவதும், SIB தனது வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஹவுஸ் டை அப்கள் மூலம் பணம் அனுப்புகிறது. 1994 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கிளைகளுடன் செயல்பட்டு வரும் ஹடி எக்ஸ்பிரஸ் எக்ஸ்சேஞ்ச் உடன் வங்கி ஒரு மூலோபாய கூட்டணியைக் கொண்டுள்ளது. துபாயில் உள்ள அதன் பிரதிநிதி அலுவலகத்திற்கு கூடுதலாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் SIB தனது இருப்பை இந்த ஒப்பந்தம் கூடுதலாக வழங்குகிறது.

மார்ச் 31, 2022 நிலவரப்படி, SBI  வங்கியின்  NRE வைப்புத்தொகை தொடர்ந்து அதிகரித்து, ரூ. 274.41 பில்லியனை (12.88 பில்லியன் திர்ஹம்) தொட்டுள்ளது. பணம் அனுப்பும் வணிகமும் ஆண்டுக்கு ஆண்டு 33 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

ஹாடி எக்ஸ்பிரஸ் எக்ஸ்சேஞ்ச் பொது மேலாளர் ஆல்பின் தாமஸ் மற்றும் SIB வங்கி அதிகாரி ஆகியோர் NRIகளின் வைப்புத்தொகை, வங்கியின் முக்கிய ஆதாரமாக உள்ளது என்றார். “எங்களுக்கு மத்திய கிழக்கில், குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நல்ல தளம் உள்ளது. அதிகமான NRIகள் தங்கள் பணம் அனுப்பும் சேவைகளுக்காக Hadi Exchange-ஐ  பயன்படுத்துகின்றனர். 

மேலும் படிக்க |  துபாய் தமிழர்களுக்கு சூப்பர் செய்தி: 90% தள்ளுபடியுடன் DSS சேல் துவக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News