சிங்கப்பூரில் விமரிசையாக நடந்த கண்ணதாசன் விழா

கண்ணதாசன் பிறந்தநாளை முன்னிட்டு சிங்கப்பூரில் கண்ணதாசன் விழா வெகு விமர்சையாக் கொண்டாடப்பட்டது.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 1, 2022, 06:45 PM IST
  • சிங்கப்பூரில் கண்ணதாசன் விழா நடைபெற்றது
  • பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன
  • சுபாஷினி என்பவருக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது
சிங்கப்பூரில் விமரிசையாக நடந்த கண்ணதாசன் விழா title=

கவியரசர் கண்ணதாசன் காலங்கடந்து நிற்பவர். அவரது அப்போது எழுதிய பாடல்கள் இப்போதும், எப்போதும் மனிதர்களின் வாழ்க்கைக்கு பொருந்திப்போவது சிறப்பு. அப்படிப்பட்ட கண்ணதாசனின் பிறந்தநாள் விழா சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் இந்த விழாவை நடந்த்தியது.

மேலும் கண்ணதாசன் பாடல் போட்டி, விருது வழங்குதல், சிறுவருக்கான் பாடல் போட்டி, நாட்டியாஞ்சலி, பாடல் எழுதும் போட்டில் என பல்சுவை நிகழ்ச்சியாக நடந்தது. இதற்கு நா. ஆண்டியப்பன் தலைமை தாங்கினார். 

தேசிய நூலக வளாக அரங்கில் நடந்த இவ்விழாவுக்கு சிங்கப்பூர் நாடாளுமன்ற செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் இந்த ஆண்டுக்கான கண்ணதாசன் விருது சுபாஷினி  என்பவருக்கு வழங்கப்பட்டது. அதேபோல் சூழலுக்கான பாடல் எழுதும் போட்டியில் சீர்காழி உ.செல்வராஜ் என்பவர் வெற்றி பெற்றார். 

மேலும் படிக்க |தட்டி கழித்ததை தொட்டுப்பார்க்க தமிழர்கள் தயாரில்லை - டக்ளஸ் தேவானந்தா கருத்து

மேலும், பாட்டுத் திறன் போட்டியில் 14 வயதுக்கு கீழிருக்கும் ஆதர்ஷ அக்னி முதல் பரிசை பெற்றார். பாரதி முரளியன் தமிழ் வாழ்த்து பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைக்க தமிழ் எழுத்தாளர் கழக செயலாளர் கிருத்திகா வரவேற்புரை ஆற்ற, கவிஞர் கோ. இளங்கோவன் நன்றியுரை ஆற்றினார்.

மேலும் படிக்க | பாஸ்போர்ட்டில் பெயர் இப்படி இருந்தால் UAE-ல் நுழைய அனுமதி கிடைக்காது

மேலும் படிக்க | லண்டனில் பாஜக ஆதரவுப் பேரணி நடத்தும் வெளிநாடுவாழ் குஜராத்திகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News