வெளிநாட்டு தமிழர்களும் இனி வாக்களிக்க நடவடிக்கை - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் தமிழ்நாட்டு தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் மற்றும் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படுமென வெளிநாட்டு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 10, 2022, 07:20 PM IST
  • வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை
  • சட்டப்பேரவையில் செஞ்சி மஸ்தான் தகவல்
வெளிநாட்டு தமிழர்களும் இனி வாக்களிக்க நடவடிக்கை - அமைச்சர் செஞ்சி மஸ்தான் title=

இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டுமென கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் இந்த கோரிக்கை வலுப்பெற்றது. ஆனால் தேர்தல் ஆணையம் அதில் தீவிரம் காட்டுவதில்லை.

இருப்பினும், பாதுகாப்புப் படை வீரர்களுக்காக மின்னணு தபால் வாக்குரிமை திட்டம் இருப்பதுபோல், இதே திட்டத்தை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் நீட்டிப்பது குறித்து பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மேலும் படிக்க | “பெண்களின் உதிரம் கொட்டுகிறது. இந்த நாடு உருப்படாது” - ரஜினிகாந்த் பேச்சு

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் பேசிய அரசு கொறடா கோவி.செழியன், “சட்டப்பேரவை, மக்களவை, உள்ளாட்சி தேர்தல்களின்போது வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழர்களும் வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுமா? தனியான வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

Gingee Masthan

இதற்கு பதிலளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், ராணுவ வீரர்களுக்கு பணிபுரியக்கூடிய மாநிலத்திலேயே வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அதேபோல அயல்நாட்டில் உள்ள தமிழர்களும் தேர்தல் நேரத்தில் வாக்களிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தர தேர்தல் ஆணையத்துடனும் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News