Google Latest Update For Employees: தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தனது புரோகிராம் எலக்ட்ரானிக் ரிவியூ மேனேஜ்மென்ட்டை ( PERM ) இடைநிறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில் , தனது PERM இன் எந்தவொரு புதிய பதிவுகளையும் இடைநிறுத்துவதாக அவர்களுக்குத் தெரிவிக்கிறது, இது தொழிலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. .கிரீன் கார்டு (நிரந்தர குடியிருப்பு) செயல்பாட்டில் PERM விண்ணப்பம் ஒரு முக்கியமான முதல் படியாகும்.
இந்த நடைமுறையில், அந்த குறிப்பிட்டப் பணியாளரைத் தவிர, இந்த குறிப்பிட்ட பணிக்கு தகுதியான அமெரிக்கர்கள் யாரும் இல்லை என்பதை நிறுவனம் நிரூபிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களைக் குறைப்பதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கூகுள் PERM நடைமுறையை இடைநிறுத்துவது இந்தியர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். முதலாளியின் ஸ்பான்சர் செய்யப்பட்ட கிரீன் கார்டு வாங்குபவர்களின் கவலையை கூகுளின் இந்த முடிவு கவலையடையச் செய்துள்ளது.
கூகுள் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலின் படி, இந்த இடைநிறுத்தமானது, பிற விசா வகைகளுக்கான தற்போதைய அல்லது எதிர்காலத்தில் வரவிருக்கும் விசா விண்ணப்பங்களை பாதிக்காது, என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இந்த 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்!
சான்றளிக்கப்பட்ட ஐடி ஊழியர்களுக்கான அநாமதேய சமூக வலைப்பின்னல் தளமான டீம் பிளைண்டில், ஒருவர் இந்த மின்னஞ்சல் தொடர்பான விஷயத்தை பகிரங்கப்படுத்திவிட்டார். இது, பணிநீக்கங்களால் அச்சத்தில் இருக்கும் கூகுள் ஊழியர் ஒருவரால் ஜனவரி 19 அன்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை டீம் பிளைண்டின் மற்றொரு உறுப்பினர் பகிர்ந்துள்ளார்.
"நான் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் சேர்ந்தேன், அவர்கள் 5 மாதங்களுக்கு முன்பு DOL க்கு PWD ஐ சமர்ப்பித்தனர்,இந்த புதிய அறிவிப்பு கூகுள் எனது வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பத்தைத் தொடராது என்று அர்த்தமா? என்ற கேள்விகளை எழுப்புகிறது" என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
PERM என்றால் என்ன?
அமெரிக்காவில் உள்ள முதலாளிகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க, தொழிலாளர் துறை (DOL) இலிருந்து "தொழிலாளர் சான்றிதழை" (LC) பெறுவதன் மூலம் நடைமுறையைத் தொடங்க வேண்டும். ஒரு "கிரீன் கார்டு" பெறுவதற்கான செயல்பாட்டில் ஈடுபடுவதற்கு முன் PERM விண்ணப்பம் முதல் படியாகும்.
அமெரிக்கப் பணியாளர்களுக்கு வேலையில் முன்னுரிமை
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு லாட்டரி, இந்த பொருட்களை இனி இலவசமாக பெறுங்கள்
அமெரிக்கப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஆனால் அவ்வாறு செய்வதில் தோல்வியடைந்துள்ளதாகவும் சான்றளிக்கும் விண்ணப்பத்தை DOL க்கு மின்னணு முறையில் சமர்ப்பிக்க முதலாளிகள் PERM அமைப்பைப் பயன்படுத்தலாம். பணியமர்த்தல் செயல்முறையின் பதிவுகளை வைத்திருப்பதற்கு முதலாளிகள் பொறுப்பாக உள்ளனர்,
கூகுளின் இந்த முடிவால் யார் பாதிக்கப்படுவார்கள்?
கூகுளின் இந்த முடிவால், தற்காலிக பணி விசாக்கள் காலாவதியாக இருக்கும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்தை பெற விரும்புபவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
பணப் பரிமாற்றங்கள் மீதான கண்காணிப்புத் திட்டம்
பணப் பரிமாற்றங்கள் மீதான கண்காணிப்புத் திட்டம் தனியுரிமைக் கவலைகளை எழுப்புகிறது
PERM விதிமுறைகளின்படி, பணிநீக்கம் செய்யப்பட்டால், முந்தைய ஆறு மாதங்களுக்குள் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியர்களுக்கு ஒரு முதலாளி தெரிவிக்க வேண்டும் மற்றும் அவர்கள் ஒரு வெளிநாட்டு குடிமகனை பணியமர்த்த திட்டமிட்டுள்ள பதவிக்கு "குறைந்தபட்ச தகுதி" உள்ளதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
மேலும் படிக்க | திருப்பதி செல்லும் பக்தர்கள் இதை தெரிஞ்சுக்காம போகாதீங்க..! கட்டணங்கள் உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ