மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பரில் டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வு.... எவ்வளவு? எப்போது?

7th Pay Commission: ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?

7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் டிஏ உயர்வு 3% ஆக இருந்தால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலலை நிவாரணம் (Dearness Relief) 53% ஆக உயரும். இது 4% சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை 54% ஆக அதிகரிக்கும். அகவிலைப்படி (DA) என்பது மத்திய அரசு அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள், அதிகரிக்கும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தின் விளைவுகளைச் சமாளிக்க கொடுக்கும் ஒரு சலுகைத் தொகையாக உள்ளது. கூடுதல் நிதி உதவியை வழங்கி பணவீக்கத்தின் தாக்கத்திலிருந்து அரசு ஊழியர்களைப் பாதுகாக்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

1 /12

மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் நல்ல செய்தி காத்திருக்கின்றது. அவர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு செப்டம்பர் மாதம் பூர்த்தி ஆகவுள்ளது. ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? அறிவிப்பு எப்போது வரும்? இதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம். 

2 /12

சமீபத்தில் வெளிவந்த ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில், அகவிலைப்படி 3% அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டது. ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 வரை, CPI-IW 2.6 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இது 138.8 இல் இருந்து 141.4 ஆக ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவாக, அகவிலைப்படி உயர்வின் சதவீதம் 50.28% இல் இருந்து 53.36% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 /12

எனினும், சமீபத்தில் சில நாட்களாக மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுவதாக சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனினும், அகவிலைப்படி 3% அதிகரிக்கப்படுமா அல்லது 4% அதிகரிக்கப்படுமா என்பது குறித்து இன்னும் தெளிவு வரவில்லை. இது குறித்து அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

4 /12

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் டிஏ உயர்வு 3% ஆக இருந்தால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலலை நிவாரணம் (Dearness Relief) 53% ஆக உயரும். இது 4% சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை 54% ஆக அதிகரிக்கும்.   

5 /12

முன்னதாக ஜனவரி 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு 4% ஆக இருந்தது. இதன் பின்னர் 46% ஆக இருந்த அகவிலைப்படி 50% ஆக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து பல கொடுப்பனவுகளிலும் ஏற்றம் ஏற்பட்டது. 

6 /12

தொழிலாளர் பணியகத்தால் மாதந்தோறும் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான (CPI-IW) தரவின் நுகர்வோர் விலைக் குறியீட்டைப் பயன்படுத்தி அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது.இதற்கான சூத்திரம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு: டிஏ% = [(கடந்த 12 மாதங்களில் AICPI இன் சராசரி (2001 அடிப்படை ஆண்டு = 100)  – 115.76)/115.76] x 100 / பொதுத்துறை ஊழியர்களுக்கு: டிஏ% = [(கடந்த 3 மாதங்களில் AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) – 126.33)/126.33] x 100.

7 /12

டிஏ (DA) 3% அதிகரிக்கப்பட்டால் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். லெவல்-1ல் உள்ள மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் கணக்கீட்டை காணலாம். 1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000 2. புதிய அகவிலைப்படி (53%) - ரூ 9540/மாதம் 3. இதுவரையிலான அகவிலைப்படி - (50%) ரூ 9000/மாதம். 4. அகவிலைப்படி அதிகரிப்பு - 9540-9000= ரூ 540/மாதம் 5. 6 மாதங்களுக்கான சம்பள உயர்வு - 540X6= ரூ 3,240  

8 /12

டிஏ (DA) 3% அதிகரிக்கப்பட்டால் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு பணியாளரின் அடிப்படைச் சம்பளம் ரூ. 40,000 என வைத்துக்கொள்வோம். டிஏ 4% அதிகரிக்கப்பட்டால், அவருக்கு மாத ஊதியத்தில் ரூ.1,600 அதிகமாகும். ஆண்டு சம்பளம் ரூ.19,200 அதிகரிக்கும்.

9 /12

ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வந்தாலும், ஜூலை முதல் ஊழியர்கள் டிஏ உயர்வுக்கான டிஏ அரியர் தொகையை பெறுவார்கள். இதனால் செப்டம்பர் மாத சம்பளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

10 /12

அகவிலைப்படி (DA) என்பது மத்திய அரசு அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள், அதிகரிக்கும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தின் விளைவுகளைச் சமாளிக்க கொடுக்கும் ஒரு சலுகைத் தொகையாக உள்ளது. கூடுதல் நிதி உதவியை வழங்கி பணவீக்கத்தின் தாக்கத்திலிருந்து அரசு ஊழியர்களைப் பாதுகாக்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

11 /12

மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை ஆண்டுக்கு இருமுறை உயர்த்துகிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் திருத்தங்கள் அமல்படுத்தப்படுகின்றன. ஜனவரி மாத அகவிலைப்படி முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும், ஜூலை மாத அகவிலைப்படி ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் (AICPI Index) அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுகின்றது.

12 /12

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. மேலும், இங்கே கொடுகப்பட்டுள்ள கணக்கீடு மதிப்பீடுகளின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. இறுதிச் சம்பளம் அதனுடன் மற்ற கொடுப்பனவுகளைச் சேர்த்த பின்னரே கணக்கிடப்படுகின்றது.