7th Pay Commission: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ, அல்லது உங்கள் வீட்டில் யாராவது மத்திய பணிகளில் இருந்தாலோ, வரும் நாட்களில் உங்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் விரைவில் மற்றொரு நல்ல செய்தியைப் பெற உள்ளனர். இப்போது அரசு அவர்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றவுள்ளது. ஊழியர்கள் பெரிய வகையில் பயனடைய உள்ளனர். புதிய ஆண்டிற்குள், அதாவது 2024 ஆம் ஆண்டிற்குள் அரசாங்கம் சிக்கியுள்ள டிஏ அரியர் தொகையை ஊழியர்களுக்கு அளிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இன்னும் சில நாட்களில் அவர்கள் மீண்டும் சில நல்ல செய்திகளை பெறக்கூடும்.
சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஊதியதாரர்களின் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 46% ஆக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து ஊதியத்தில் நல்ல ஏற்றம் ஏற்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) மற்றொரு நல்ல செய்தியும் காத்திருக்கிறது. அடிப்படை ஊதியத்தை தீர்மானிக்கும் ஃபிட்மெட் ஃபாக்டரை (Fitment Factor) அதிகரிக்க வேண்டும் என்று ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு இப்போது அரசு செவி சாய்க்கலாம் என கூறப்படுகின்றது.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.60 மடங்குகளில் இருந்து 3.0 மடங்காக அதிகரிக்கலாம் என சில அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்து அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. ஆனால் இந்த அதிகரிப்பு விரைவில் நடக்கும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கொரோனா பெருந்தோற்று நம் உலகை ஆட்கொண்ட போது, அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது உலகமே ஸ்தம்பித்து போனதால், நிதி நெருக்கடியும் இருந்தது. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட நலிவடைந்த பிரிவினருக்கு உதவ, அரசு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (Dearness Allowance) முடக்கியது. நிலைமை சற்று சரியானவுடன் டிஏ முடக்கம் நீக்கப்பட்டது.
இந்த டிஏ அரியர் (Da Arrears) தொகையை அளிக்க வேண்டும் என ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேர்தலுக்கு முன் அரசு ஊழியர்களின் இந்த கோரிக்கைக்கு சம்மதம் தெரிவிக்கலாம் என கூறப்படுகின்றது. டிஏ நிலுவைத் தொகை தொடர்பாக ஊழியர் அமைப்புகள் அரசுக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. இதன் மூலம் சுமார் 1 கோடி ஊழியர்கள் பயனடைவார்கள்.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்கவுள்ளது. அரசாங்கம் அதற்கு முன் 18 மாத கால அகவிலைபப்டி அரியர் தொகையை கணக்கில் டெபாசிட் செய்தால், அது ஊழியர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்காக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத டிஏ பாக்கியை வழங்கினால், உயர் பிரிவு ஊழியர்களின் கணக்கில் சுமார் 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வரும்.
ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் மத்திய அரசு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பு மற்றும் 18 மாத அரியர் தொகை ஆகிய இரு பரிசுகளை வழங்கக்கூடும் என கூறப்படுகின்றது. விலைவாசி அதிகரிப்பு மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது பெரிய அளவில் உதவியாக இருக்கும்.