குஷ்பூ நடித்த முதல் தமிழ் படம் என்னவென்று தெரியுமா?

பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ பல துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்.

 

1 /5

1980-ம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான 'தி பர்னிங் ட்ரெயின்' மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது திரைவாழ்க்கையை தொடங்கியவர் நடிகை குஷ்பூ.  

2 /5

நடிகை என்பது மட்டுமின்றி இவர் அரசியல்வாதியாகவும், தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.  

3 /5

நடிகை குஷ்பூ தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.  மேலும் மூன்று தமிழ்நாடு மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.  

4 /5

1988-ம் ஆண்டு தமிழில் ரஜினிகாந்த் மற்றும் பிரபு ஆகியோரது நடிப்பில் வெளியான 'தர்மத்தின் தலைவன்' படத்தின் மூலம் நடிகை குஷ்பூ தமிழில் அறிமுகமானார்.  

5 /5

ஆரம்பத்தில் திமுக கட்சியில் இருந்து, பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு சென்று தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார்.