அட்டகாசமான ஸ்டைலுடன் குறைவான விலையில் எம்ஜி விண்ட்ஸ்டர் கார்! பேட்டரிக்கு வாடகை ஏன்?

MG Battery-as-a-Service (BaaS) : இந்தியாவில் எம்ஜியின் புதிய வின்ட்சர் மின்சார கார் மாடலின் விலை ரூ.9.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த மின்சார காரின் சிறப்பம்சங்களைத் தெரிந்துக் கொள்வோம்...

Special Features Of MG Windsor EV : இந்த புதிய அறிமுகத்தின் முன்பதிவு அக்டோபர் 3ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்றும், அக்டோபர் 12 ஆம் தேதி கார் டெலிவரி தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன... 

1 /8

JSW உடன் கூட்டாண்மையை அறிவித்த பிறகு வெளியாகும் வின்ட்சரின் முதல் தயாரிப்பு இது. ZS EV மற்றும் கோமெட் மாடலுக்குப் பிறகு எம்ஜி நிறுவனத்தின் மூன்றாவது மின்சார வாகனம் இது

2 /8

வின்ட்சரின் இந்த காரில் பேட்டரி வாடகை அடிப்படையில் கிடைக்கிறது. அதாவது காரின் விலையில் பேட்டரியின் விலை சேர்க்கப்படவில்லை 

3 /8

MG இதை பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ் (BaaS) என்று அழைக்கிறது. அங்கு வாங்குபவர்கள் ஒரு கிலோமீட்டருக்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். அதன்படி, ஒரு கி.மீ.க்கு ரூ. 3.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  

4 /8

ஆட்டோமொபைல் நிறுவனத்தின் வாடகை பேட்டரி என்ற இந்த வித்தியாசமான உத்தியானது, வாகனத்தின் செலவு மற்றும் கிலோமீட்டருக்கான பயண செலவையும் குறைக்கிறது 

5 /8

வின்ட்சர் கார் மாடலானது எக்சைட், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எசென்ஸ் ஆகிய மூன்று டிரிம்களில் கிடைக்கிறது.  

6 /8

ஸ்டார்பர்ஸ்ட் பிளாக், பேர்ல் வைட், களிமண் பழுப்பு மற்றும் டர்க்கைஸ் கிரீன் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. Eco+, Eco, Normal மற்றும் Sport ஆகிய நான்கு டிரைவிங் மோடுகளையும் வின்ட்சர் பெறுகிறது.

7 /8

வின்ட்சர் 38kWh LFP பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. ப்ரிஸ்மாடிக் செல்கள் உடன் 331கிமீ வரம்பைக் கொண்டுள்ளது. முன் அச்சில் பொருத்தப்பட்ட மோட்டார் 136hp மற்றும் 200Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது.   

8 /8

வின்ட்சர் 45 கிலோவாட் சார்ஜரைப் பயன்படுத்தி 55 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யலாம்