30 ஆண்டுக்குப் பிறகு சனி சதய நட்சத்திரத்தில் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

Saturn Transits in Sadayam Nakshatra: கர்மவினையை தரும் சனி தற்போது 30 வருடங்களுக்கு பிறகு கும்ப ராசியில் பெயர்ச்சியாகியுள்ளார். இன்று அதாவது மார்ச் 15ஆம் தேதி புதன்கிழமை சனி சதயம் நட்சத்திர பெயர்ச்சி செய்ய உள்ளார். அதன் பிறகு அக்டோபர் 17ம் தேதி வரை சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில் இருப்பார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.

1 /5

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். வியாபாரிகள் புதிய தொழில் தொடங்கலாம். பொருளாதார ஆதாயம் உண்டாகும். வருமானத்தில் உயர்வு இருக்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.  

2 /5

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களின் பெரிய கனவுகள் நிறைவேறும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டாகும். தொழிலில் பெரிய வெற்றியை அடைய முடியும். வருமானம் அதிகரிக்கும்.  

3 /5

சிம்ம ராசி: தொழிலில் வெற்றியைத் தரும். எதிர்பார்த்த வெற்றியை அடையும் நேரம் வந்துவிட்டது. புதிய வேலை வாய்ப்புகள் வரலாம். தொழில் மற்றும் சொத்துக்களில் லாபம் உண்டாகும்.  

4 /5

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலையில் சேரலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.  

5 /5

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு வலுவான வாய்ப்பு உள்ளது. விரும்பிய வேலை கிடைக்கும்.