இனிப்பான சுவையுடைய அன்னாசிப்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளது என்றாலும் இதனை அதிகளவில் சாப்பிடுவது உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
அன்னாசிப்பழத்தில் அதிகளவில் குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் நிறைந்துள்ளது, இதனை அதிகமாக சாப்பிடும்போது சிலருக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
பழங்களிலும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது, அதிகப்படியான கார்போஹைட்ரேட்டும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். அந்த வகையில் அரை கப் அன்னாசிப்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
அன்னாசிப்பழத்தின் சாறு மற்றும் தண்டில் ப்ரோமெலைன் என்சைம் உள்ளது, இயற்கையான ப்ரோமெலைன் ஆபத்தானது இல்லையென்றாலும் இதனை சில மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால், அது இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.
அன்னாசிப்பழத்தின் அமிலத்தன்மை காரணமாக ஈறுகள் மற்றும் பற்சிப்பிகள் மோசமடையக்கூடும். அதிகளவில் அன்னாசிப்பழம் சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
அன்னாசி பழச்சாறு குடிப்பது சிலருக்கு வயிற்றில் ஒருவித அசௌகரியமான உணவர்வை ஏற்படுத்தக்கூடும் மற்றும் இதனை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது.