குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றி மழை பொழியும்

Guru Peyarchi 2023: வேத சாஸ்திரங்களின்படி, ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு பகவான் மீனத்தை விட்டு, மேஷ ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். மே 1, 2024 வரை அவர் அதே ராசியில் அமர்ந்திருப்பார். மேஷ ராசியில் சஞ்சரித்த பிறகு, வியாழன் செப்டம்பர் 4 முதல் வக்ரமாவார். மேலும் டிசம்பர் 31 அன்று அவர் வக்ர நிவர்த்தி அடைவார். ஏப்ரல் 22-ம் தேதி அஸ்தமனமான குருவின் ராசியில் மாற்றம் ஏற்படும். மார்ச் 31, 2023 இல் அஸ்தமனமாகும் குரு, ஏப்ரல் 30 அன்று மீண்டும் உதயமாவார். இதற்கிடையில், வியாழன் ஏப்ரல் 22 அன்று தனது ராசியை அவர் மாற்றுவார். 

அறிவாற்றல், கல்வி மற்றும் தொண்டு ஆகியவற்றின் அதிகரிப்புக்கு வியாழன் காரணியாக கருதப்படுகிறது. குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் நுழைகிறார். இதனால் யாருக்கு ஆதாயம் ஏற்படும், யாருக்கு சுமாரான பலன்கள் இருக்கும்? இந்த பதிவில் காணலாம். 

1 /12

குரு பெயர்ச்சியின் தாக்கம் மேஷத்தில் காணப்படும், இந்த நேரத்தில் உங்கள் பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணத்தை சேமிக்க முயற்சிக்கவும். உங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள்.

2 /12

வியாழனின் இரண்டாவது பெரிய மாற்றம் ரிஷஓத்தில் சாதகமான விளைவைக் காண்பிக்கும். இந்த நேரத்தில் புதிய வேலைகள் தொடங்கலாம். அனைவரிடமும் இனிமையான வார்த்தைகளை பேசுங்கள். சேமிப்பைப் பற்றி சிந்தியுங்கள். தடைபட்ட பணிகள் அனைத்தும் வரும் காலத்தில் முடிக்கப்படும்.

3 /12

மிதுன ராசிக்கு 11ம் வீட்டில் வியாழன் பெயர்ச்சி நடக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். இத்துடன் நல்ல பலன்களும் கிடைக்கும். இந்த மாற்றம் மிதுன ராசியினருக்கு சாதகமாக அமையும்.

4 /12

வியாழன் சஞ்சாரம் கடக ராசிக்கு கலவையான பலனை தரும். அலுவலக வேலைகளில் மும்முரமாக இருப்பீர்கள். காதல் உறவு வலுவாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். பயண வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும்.

5 /12

 சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாழன் சஞ்சாரம் நன்மை தரும். திடீர் பணம் கிடைக்கலாம். வியாழனின் சொந்த வீடான ஒன்பதாம் வீட்டில் வியாழன் சஞ்சரிப்பார். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.  

6 /12

கன்னி ராசிக்கு வியாழன் பெயர்ச்சி முதலீட்டிற்கு சாதகமான காலமாக இருக்கும். காதல் உறவுகள் தீவிரமாக இருக்கும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள்.

7 /12

வியாழன் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமாக இருக்கும். வியாழனின் சஞ்சாரம் துலாம் ராசியை தொழிலில் வளரச் செய்யும். உணவில் கவனம் செலுத்தினால் உடல் நலம் சீராகும். சுப பலன்கள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

8 /12

தொழிலில் முன்னேற்றம் இருக்கும், ஆனால் இந்த நேரத்தில் வேலை அதிகமாக இருக்கும். வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையில் சமநிலையை பராமரிக்கவும். குடும்ப வாழ்க்கையில் உங்கள் மனைவிக்கு சிறிது நேரம் கொடுங்கள்.

9 /12

தனுசு ராசியில் வியாழன் பெயர்ச்சி 5 ஆம் வீட்டில் நடைபெறும். தடைபட்ட வேலைகள் நடந்து முடியும். செப்டம்பர் 4-ம் தேதிக்குப் பிறகு சுப நேரம் தொடங்கும்.

10 /12

மகர ராசியில் வியாழன் சஞ்சாரம் செய்வதால் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குறித்த நேரத்தில் பணிகள் முடிவடையும். முழு கவனத்துடன் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.

11 /12

இந்த நேரத்தில் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். பணத்தை சேமிக்க இதுவே சிறந்த நேரம். பொருளாதார நிலையைக் கவனியுங்கள். செலவுகள் அதிகமாக இருக்கலாம். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு இருக்கும்.  

12 /12

உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். 

You May Like

Sponsored by Taboola