Guru Vakra Peyarchi: குருவின் வக்ரப் பெயர்சியால் திண்டாடப்போகும் 4 ராசிகள்! சூதானம் அவசியம்

Jupiter Retro Bad Effects: மேஷ ராசியில் இருந்து செப்டம்பர் 4ம் தேதியன்று, குரு பகவான் வக்ர கதியில் பெயர்ச்சி அடைந்து, மீன ராசியில் நுழைவார். 21 ஆண்டுகளுக்கு பிறகு குருவினின் இந்த மாற்றம் நிகழவுள்ளது.

இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் ஏற்பட்டு, அதிர்ஷ்ட மழையில் நனைந்தால், சிலரோ சோகத்தை மறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். கவலைகளை நீக்கவும் அதே குரு பகவானே வழிகாட்டுவார். குருவின் வக்ரப் பெயர்சியால் திண்டாடப்போகும் 4 ராசிகள் இவை...

1 /8

குருவின் வக்ர பெயர்ச்சியால் சிரமங்களை அனுபவிக்கப்போகும் சில ராசிகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். இந்த ராசிக்காரர்கள், செப்டம்பர் 4 முதல் கவனமாக இருப்பது, கெடுபலன்களைக் குறைக்கும்

2 /8

பொதுவாக, எந்தவொரு கிரகப் பெயர்ச்சியும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சில ராசிகளுக்கு நன்மைகள் அதிகமாகவும், சில ராசியினருக்கு தீமைகள் அதிகமாகவும் இருக்கும்

3 /8

தேவ குரு வியாழன் மிகவும் மங்களகரமான கிரகம், இவருடைய பெயர்ச்சியினால், திருமணம், சுபகாரியங்கள் சிலருக்கு நடைபெறும் என்றால், சிலருக்கு தடைகள் ஏற்படும்

4 /8

ரிஷபம் வியாழன் பிற்போக்கு நகர்வு, ரிஷபத்தின் பன்னிரண்டாவது வீட்டில் நடைபெறுகிறது. எனவே இந்த நிகழ்வு உங்களுக்கு மிகவும் சாதகமாக இல்லை. எனவே இந்த நிகழ்வு, உடல்நலப் பிரச்சனைகளை கொடுக்கலாம்.  கடந்த காலத்தில் நீங்கள் செய்த முதலீடுகள் மற்றும் உங்கள் ஆசைகள் பற்றிய மறுபரிசீலனையை செய்ய வைப்பார் குரு பகவான்

5 /8

விருச்சிகம் வாழ்க்கையில் நிறைய மோதல்கள் மற்றும் சண்டைகள் மீண்டும் வரலாம். குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். சேமிப்புகள் மோசமடையலாம் மற்றும் அதிக செலவு செலவாவதால், மனம் சஞ்சலப்படும்

6 /8

துலாம் திருமண வாழ்க்கையில் நிறைய மோதல்கள் வரப் போகிறது. அதிலும் திருமணமானவர்கள் மற்றும் காதலர்கள் தைரியத்தையும் நம்பிக்கையையும் இழக்க நேரிடலாம். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் செய்யும் பிரச்சனைகள் மற்றும் தவறுகளை பகுப்பாய்வு செய்யுங்கள். நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடல்நலம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்

7 /8

வியாழன் சிம்மத்தின் ஐந்தாவது மற்றும் எட்டாவது வீட்டில் ஆட்சி செய்கிறார், தந்தையின்  உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும். வியாழனின் பெயர்ச்சியால், தந்தை, குரு, மதம் என ஏதாவது ஒரு பொறுப்பை நிறைவேற்ற வாய்ப்பளிக்கும். அதேபோல, வேண்டுதல்கள் ஏதேனும் இருந்தால் நிறைவேற்ற வாய்ப்புகள் வரும்

8 /8

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)