மும்பை இந்தியன்ஸ் தவறவிட்ட தங்கம்... சிக்ஸர் மழையால் திணறிய மைதானம் - யார் இவர்?

IPL 2024: மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஏலத்தில் விடுவித்த ஒரு வீரர், தற்போது சிக்ஸர் மழை பொழிந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியிருக்கிறார். அவர் யார் என்பது குறித்து இதில் காணலாம். 

  • Mar 24, 2024, 17:49 PM IST

இந்த ஐபிஎல் சீசனை முன்னிட்டு கடந்த டிசம்பர் மாதம் மினி ஏலம் நடைபெற்றது. இந்த மினி ஏலத்திற்காக பல அணிகள் தங்களின் பல வீரர்களை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

1 /7

17ஆவது ஐபிஎல் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று போட்டிகள் நடைபெறுகின்றன. ஏற்கெனவே, மூன்று போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. இதில் சென்னை அணி ஆர்சிபி அணியையும், பஞ்சாப் அணி டெல்லி அணியையும், கொல்கத்தா ஹைதராபாத் அணியையும் வீழ்த்தி இருக்கின்றன.     

2 /7

இதில் கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது. இரு அணிகளும் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சிறப்பாகவே விளையாடியது, கடைசி பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்டபோது ஹைதராபாத் வெற்றியை கோட்டைவிட்டது. கொல்கத்தாவின் வெற்றிக்கு பலரின் பங்கேற்றிருந்தாலும் மிடில் ஆர்டர் பேட்டர் ரமன்தீப் சிங் முக்கியமானவர். அவர் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.   

3 /7

சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், நிதீஷ் ராணா என டாப் ஆர்டர் வீரர்கள் ஆட்டமிழந்தபின் ரமன்தீப் சிங் களமிறங்கி 17 பந்துகளில் 35 ரன்களை அடித்து மிரட்டியிருப்பார். அதில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடக்கம். வெற்றிக்கு பின் பேசிய அவர் தன்மீது நம்பிக்கை வைத்து களமிறக்கிய கௌதம் கம்பீருக்கும், அபிஷேக் நாயருக்கும் நன்றி தெரிவித்தது மட்டுமின்றி இதேபோலவே தொடர்ந்து விளையாட ஆசைப்படுவதாக தெரிவித்தார். 

4 /7

முன்னதாக, மினி ஏலத்தை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்த 11 வீரர்களில் ரமன்தீப் சிங்கும் ஒருவர். இவர் கடந்தாண்டு மும்பை அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். எகானமி 9 ஆகும். ஆல்-ரவுண்டரான இவரை மும்பை விடுவிக்க, கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணி அவரின் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு கொக்கிப் போட்டு தூக்கியது.  

5 /7

ரமன்தீப் சிங் முதல்தர போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். 2023 சயீத் முஷ்டாக் டி20 லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பஞ்சாப் அணிக்கும் இவர் பெரும் பங்காற்றினார். பேட்டிங்கில் 7 இன்னிங்ஸில் 127 ரன்களை 31 ரன்கள் சராசரியில் எடுத்தார். அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக அதிகபட்சமாக 42 ரன்களையும் குவித்திருந்தார்.    

6 /7

2022-23 விஜய் ஹசாரா தொடரில் பஞ்சாப் அணிக்காக அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். இந்திய வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் கிடைப்பது அரிது என்பதை புரிந்துகொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை அணிக்குள் எடுத்தது.   

7 /7

இருப்பினும், ரமன்தீப் சிங் பந்துவீச்சை விட பின்வரிசையில் ரின்கு சிங், ரஸ்ஸலுக்கு முன் சென்று சிக்ஸர்களை பறக்கவிடுவதை மட்டும் இவரின் பணியாக கொடுத்து Impact Player ஆகவே பயன்படுத்தியது. இந்த பணியை ரமன்தீப் சிங் சிறப்பாக செய்யும்பட்சத்தில் கேகேஆர் நிச்சயம் பிளேஆப்பை தொடும்.