கடுப்பில் பும்ரா... கேப்டன் கனவை கலைத்தாரா ஹர்திக் பாண்டியா? - புயலை கிளப்பும் இன்ஸ்டா ஸ்டோரி

Jasprit Bumrah: ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி உள்ள நிலையில், பும்ராவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது புது புயலை கிளப்பி உள்ளது. 

  • Nov 28, 2023, 13:43 PM IST

 

 

 

 

1 /7

ஐபிஎல் 2024 சீசன் ஏலம் வரும் டிச. 19ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே, டிச.12ஆம் தேதி வரை ஐபிஎல் டிரேடிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

2 /7

அந்த வகையில் பல வீரர்கள் டிரேட் செய்யப்பட்ட நிலையில், அதன் உச்சமாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு டிரேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

3 /7

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த நிலையில், அந்த உரிமையாளர் நிதா அம்பானியும் பதிவிட்டிருந்தார். அதில்,"...அவருக்கும் (ஹர்திக்) மும்பை இந்தியன்ஸுக்கும் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சிக்குள்ளாகிறோம்" என பதிவிட்டிருந்தார்.  

4 /7

மேலும், ஹர்திக் பாண்டியா மும்பை அணியை தலைமை ஏற்க வந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, குஜராத் அணிக்கு கடந்த 2 ஆண்டுகள் கேப்டனாக இருந்த அவர் 2022இல் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார், 2023இல் இறுதிப்போட்டி வரை முன்னேறி சிஎஸ்கேவிடம் சறுக்கியது. எனவே, கடந்த இரண்டு வருடமும் கேப்டன்ஸியில் ஹர்திக் பாண்டியா கலக்கியிருக்கிறார். 

5 /7

2020க்கு பின் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்ல முடியவில்லை. மேலும், சிறப்பான ஆல்ரவுண்டரும் அவர்களுக்கு கிடைக்காமல் இருந்தது. எனவே, கேப்டன்ஸி, ஆல்-ரவுண்டிங் ஆப்ஷன் ஆகியவற்றை ஹர்திக் பூர்த்தி செய்வார் என கூறப்படுகிறது.   

6 /7

இதில், ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து கீழிறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. ரோஹித்திற்கு பின் கேப்டன்ஸி பொறுப்பு பும்ராவுக்கு செல்லும் என கூறப்பட்டது. இப்போது ஹர்திக்கின் வருகையால் ரோஹித் மட்டுமின்றி பும்ராவின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.   

7 /7

இந்நிலையில், பும்ராவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் அந்த ஸ்டோரியில்,"சில நேரங்களில் அமைதிதான் சிறந்த பதிலாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் திரும்பியதில், பும்ராவுக்கு அதிருப்தி இருப்பதாக பேச்சுகள் கிளம்பி உள்ளன.