சமையலில் கலக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Madhampatty Rangaraj: சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். இவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்ப்போம்.

 

1 /7

நடிகர் மற்றும் தொழிலதிபரான மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுராக இருந்து வருகிறார். சமையல் சம்பந்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இவருக்கு தனி ரசிகர்கள் உள்ளனர்.  

2 /7

20000 முதல் 75000 பேர் வரை ஒரே நேரத்தில் சமைத்து கொடுக்க கூடிய திறமை கொண்டவர் மாதம்பட்டி ரங்கராஜ். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு விருந்துகளை தயார் செய்து வருகிறார்.    

3 /7

கோயம்புத்தூரை சேர்ந்த இவரின் தந்தை தங்கவேல் அந்த பகுதிகளில் பிரபலமான சமையல்காரராக இருந்து வருகிறார். தனது தந்தையின் தொழிலை தற்போது இவர் எடுத்து நடத்தி வருகிறார்.   

4 /7

சிறுவயதில் இருந்தே சமையல் மீது ஆர்வம் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது இந்த துறையில் பல சாதனைகளை படைத்துள்ளார். பல புதுமைகளை சமையலில் புகுத்தி வருகிறார்.  

5 /7

சமையல் மட்டுமின்றி மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.  தமிழ்நாட்டில் உள்ள பல பிரபலங்களின் நிகழ்ச்சியில் சமைத்துள்ளார்.  

6 /7

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி, மத்திய இணை அமைச்சரான எல்.முருகன், முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், ரஜினி என பலரும் இவரது உணவை சாப்பிட்டு உள்ளனர்.   

7 /7

சமையல் தொழிலை கார்ப்பரேட் தொழில் போல் மாற்றி உள்ள இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 4 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஏகப்பட்ட சொத்துக்களும் உள்ளன.