SBI அம்ரித கலசம் FD திட்டம்...டிசம்பர் 31ம் தேதி வரை தான் சான்ஸ்!

பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக அற்புதமான திட்டங்களை செயல்படுத்துகிறது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை பெருக்கி, தங்களது எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ளலாம்.  பாரத ஸ்டேட் வங்கியின் அம்ரித கலசம் திட்டம் மிகவும் பிரபலமாகி வருவதால், வங்கி அதன் கடைசித் தேதியை தொடர்ந்து நீட்டித்து வருகிறது.

நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான, எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமிர்த கலசம் என்ற சிறப்பு டெபாசிட் திட்டத்தை மீண்டும் நீட்டித்துள்ளது. எஸ்பிஐயின் அம்ரித் கலச திட்டம் அதன் வாடிக்கையாளர்களின் இதயங்களில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. எனவே இந்த அம்ரித கலசம் திட்டத்தில் உள்ள சிறப்பு என்ன என்பதை உங்களுக்கு கூறுவோம்.

1 /6

SBI வங்கியின் அம்ரித கலசம் திட்டம் 400 நாட்களுக்கான FD திட்டமாகும், இதில் வாடிக்கையாளர்கள் 7.5 சதவீதம் முதல் 7.6 சதவீதம் வரை வட்டி பெறுகிறார்கள். உங்கள் பணத்தை நல்ல இடத்தில் முதலீடு செய்து நல்ல வருமானத்தைப் பெற விரும்பினால், பாரத ஸ்டேட் வங்கியின் இந்த சிறந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

2 /6

எஸ்பிஐயின் இந்தத் திட்டத்தின் கடைசித் தேதி முன்னதாக ஆகஸ்ட் 15, 2023 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டம் டிசம்பர் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

3 /6

எஸ்பிஐயின் அம்ரித கலசம் திட்டத்தில் முதிர்வு முடிந்த பின்னரே உங்களுக்கு வட்டி வழங்கப்படும். மறுபுறம், நீங்கள் முதிர்வு காலத்திற்கு முன்பே திரும்பப் பெற விரும்பினால், டெபாசிட் நேரத்தில் பொருந்தக்கூடிய விகிதத்தை விட 0.50% முதல் 1% வரை குறைவான வட்டியைப் பெறலாம். 

4 /6

பாரத ஸ்டேட் வங்கி பொது மக்களுக்கு ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 3% முதல் 7% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது மற்றும் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள் 3.50% முதல் 7.50% வரை வழங்குகிறது. 

5 /6

பாரத ஸ்டேட் வங்கி 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கான முதலீடுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச வட்டி விகிதம் பொது குடிமக்களுக்கு 7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.50% ஆகும். 

6 /6

பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்காக பெரும் வரவேற்பை பெற்ற அம்ரித கலசம் நிலையான வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.