Energy independence: பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்தால் என்ன? இனி கார் நீரிலேயே ஓடும்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தால் என்ன? இனி உங்கள் கார் தண்ணீரின் உதவியுடன் ஓடும். உண்மை தான் இது விளையாட்டல்ல… ஏனென்றால் இதைக் கூறியது பிரதமர் மோடி…

75 வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய ஹைட்ரஜன் மிஷனை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியா, தனது 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு முன்பு, எரிசக்தி துறையில் சுதந்திரம் பெற உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய நாடு ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். 

Also Read | மூவர்ணங்களில் ஜொலிக்கும் அரசு கட்டிடங்கள் 

1 /6

இந்தியா அதன் மொத்த பெட்ரோலியம் மற்றும் பிற எரிசக்தி தேவைகளில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. மறுபுறம், இயற்கை எரிவாயுத் தேவையில் பாதி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

2 /6

இந்தியாவின் ஆற்றல் போதுமான மற்றும் பாதுகாப்பு இலக்குகளை அதிகரிக்க தேசிய ஹைட்ரஜன் மிஷனைத் தொடங்குவதாக ஆகஸ்ட் 15ம் தேதியன்று பிரதமர் அறிவித்தார். சுதந்திர தினத்தன்று பிரதமர் செங்கோட்டையில் ஆற்றிய உரையில், எரியாற்றல் சுதந்திரத்தின் (energy independence) அவசியத்தை வலியுறுத்தினார், இந்த திட்டம் இந்தியாவை பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

3 /6

நாட்டில் மேம்பட்ட அடிப்படை கட்டமைப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கதிசக்தி திட்டத்தை (Gatishakti scheme) விரைவில் தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.  

4 /6

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்வது இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் என்று பிரதமர் தெரிவித்தார். சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியின் கீழ், நான் தேசிய ஹைட்ரஜன் மிஷனை அறிவிக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

5 /6

தற்போது, இந்தியாவில் ஹைட்ரஜன் வாயுவை உருவாக்க இரண்டு வகையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீரில் இருந்து ஹைட்ரஜன் பிரிக்கப்படுகிறது. அதாவது, தண்ணீரின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட ஹைட்ரோடான் மூலம் கார்களை இயக்க முடியும். இருப்பினும், இந்த முறை ஹைட்ரஜன் எரிவாயு எரிபொருளை ஆதரிக்கும் கார்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். மற்ற வழிகளில், இயற்கை எரிவாயு, ஹைட்ரஜன் மற்றும் கார்பனாக உடைக்கப்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் ஹைட்ரஜன் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

6 /6

பிரதான் மந்திரி கதிசக்தி- தேசிய முதன்மைத் திட்டம் (Pradhan Mantri Gatishakti- National Master Plan) விமான நிலையம், புதிய சாலைகள் மற்றும் ரயில் திட்டங்கள் உள்ளிட்ட போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தி, தொழில்துறை நடவடிக்கைகளை ஊக்குவிப்பதோடு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கும். 2047 க்குள் இந்தியாவை ஆற்றல் அடிப்படையில் தன்னிறைவு பெறச் செய்யும் பிரகடனத்தையும் பிரதமர் அறிவித்தார்.