குரு பெயர்ச்சி: இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், ராஜவாழ்க்கை அமையும்

Guru Peyarchi, April 2023: சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 22 ஆம் தேதி, தேவகுரு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகவுள்ளார். அதிகாலை 04.42 மணிக்கு குரு மீனத்தில் இருந்து விலகி மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். மே 1, 2024 வரை அவர் இந்த ராசியில் அமர்ந்திருப்பார். அதே நாளில், அதாவது ஏப்ரல் 22 ஆம் தேதி சனிக்கிழமை அட்சய திருதியையும் வருகிறது. 500 வருடங்கள் கழித்து, அட்சய திருதியை அன்று குரு பெயர்ச்சியாகும் யோகம் அமைகிறது. 

1 /7

வியாழன் மேஷ ராசியில் பெயர்ச்சியாகும் போது சூரியன், புதன், ராகு ஆகிய கிரகங்களும் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், சதுர்கிரஹி யோகமும், ராகு குரு சேர்க்கையால் குரு சண்டாள யோகமும் உண்டாகும். அக்டோபர் 30 வரை குரு சண்டாள யோகம் இருக்கும். குரு மே 01, 2024 அன்று மதியம் 01:50 வரை மேஷ ராசியில் இருக்கிறார். 

2 /7

குரு பகவான் அறிவாற்றல், கல்வி, தொண்டு மற்றும் சந்ததிகளின் காரக கிரகமாக இருக்கிறார். குரு பெயர்ச்சியால் சில ராசிகள் அதிகப்படியான பலன்களை பெறவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

3 /7

மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன், குரு மற்றும் ராகு சேர்க்கை மிகவும் சாதகமாக இருக்கும். குடும்ப ஆதரவு, இலக்கில் வெற்றி ஆகியவை கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள், மரியாதை கூடும். இதனுடன், பணியிடத்தில் உங்கள் வேலையைப் பார்த்து, பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கலாம். 

4 /7

சிம்ம ராசிக்காரர்களுக்கு எங்கிருந்தோ திடீரென்று பணம் கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நன்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி மற்றும் முன்னேற்றத்தையும் அடைவீர்கள். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். 

5 /7

தனுசு ராசிக்கு உகந்த இடத்தில் சூரியன், குரு மற்றும் ராகு சேர்க்கை நடைபெறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதிர்ஷ்டம் அனைத்து வகைகளிலும் உங்களுடன் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், இந்த காலம் புதிய வேலையைத் தொடங்க நல்ல நேரமாக இருக்கும். இப்போது வாழ்க்கையில் மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறுவீர்கள். 

6 /7

குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வீடு மற்றும் நிலத்தில் முதலீடு செய்வதற்கு சாதகமான காலம் இது. குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். வியாபாரிகள் லாபம் பெறலாம். உங்களின் தைரியமும், பலமும் கூடும். 

7 /7

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை