மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: இது குருவின் கேரண்டி

Guru Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசிரில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.

Guru Peyarchi Palangal: குரு பகவான் சுப பலன்களை அளிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. மே மாதம் ரிஷபத்தில் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

குரு பகவான் திருமணம், குழந்தைகள், அதிர்ஷ்டம், மதப் பணி, செல்வம் மற்றும் செழுமை போன்றவற்றுக்கு காரணி கிரகமாக உள்ளார். குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 

2 /8

குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினு, சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்க்கையில் வெற்றியின் உச்சம் தொடுவார்கள். பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

3 /8

மேஷம்: ரிஷப ராசியில் குருவின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். உங்கள் தொழிலில் ஒவ்வொரு திருப்பத்திலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பல இடங்களிலிருந்து பல வித வாய்ப்புகளை பெறுவார்கள். திடீர் பண வரவு இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும், திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்.

4 /8

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியின் பலனால் வருமானம் அதிகரிக்கும். பண விஷயத்தில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வித்துறையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வணிக வர்க்கத்தினர் முதலீட்டில் நல்ல லாபம் பெறுவார்கள். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். பண வரவு அதிகமாகி அதனால் வங்கி இருப்பு அதிகரிக்கும்.

5 /8

சிம்மம்: குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். குரு அருளால் வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான புரிதல் அதிகரிக்கும். அரசு வேலைகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். வியாபாரம் செழிக்கும்.

6 /8

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அளிக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோகியம் மேம்படும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். 

7 /8

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் அருளால் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.