அந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்

Favourite Zodiac Signs of Lord Shani: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என போற்றப்படுகிறார். கிரங்களில் அவர் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.

Favourite Zodiac Signs of Lord Shani: ஜோதிட கணக்கீடுகளின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார்.  அவர் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியிலேயே இருப்பார். எனினும் வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் போன்ற மாற்றங்கள் இருக்கும். சனி பகவான் எந்த வித பாரபட்சமும் பார்க்காமல் அனைவருக்கும் அருள் புரிகிறார். எனினும், சில ராசிகள் அவருக்கு மிகவும் பிடித்தமான ராசிகளாக இருக்கிறார்கள். இவர்கள் மீது சிறப்பு அருளை பொழிகிறார் சனி. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.  

1 /10

சனி பகவானை கண்டு பெரும்பாலும் பலரும் அஞ்சுவதுண்டு. ஆனால், நல்ல செயல்களை செய்தால் அவர் நல்ல பலன்களையே அளிக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தீய செயல்களுக்கான தீய பலன்களை கிள்ளியும் நல்ல செயல்களுக்கான நல்ல பலன்களை அள்ளியும் கொடுக்கும் கொடை வள்ளல் அவர். 

2 /10

சனி பகவானின் ராசி மாற்றம், அதாவது சனி பெயர்ச்சிக்கு ஜோதிடத்தில் சிறப்பான இடம் உள்ளது. இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளின் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. அதே போல் ஏழரை சனியும் ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கிய காலகட்டமாக பார்க்கப்படுகின்றது  

3 /10

ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்தாலோ, அல்லது அந்த நபர் மீது அவர் அவரது அருள் இருந்தாலோ, அவர் வாழ்வில் அதிகப்படியான மகிழ்ச்சியை பெறுகிறார். நேர்மையான, சீரான, முன்னேற்றம் மிக்க வாழ்க்கை அவருக்கு கிடைக்கின்றது. 

4 /10

சனி பகவான் எந்த வித பாரபட்சமும் பார்க்காமல் அனைவருக்கும் அருள் புரிகிறார். எனினும், சில ராசிகள் அவருக்கு மிகவும் பிடித்தமான ராசிகளாக இருக்கிறார்கள். இவர்கல் மீது அருளை பொழிகிறார் சனி. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம். 

5 /10

துலாம்: சனியின் விருப்பமான ராசிகளில் துலாம் ராசிக்கு சிறப்பு இடம் உள்ளது. துலா ராசிக்காரர்கள் மீது சனி பகவான் எப்போதும் கனிவுடன் இருக்கிறார். இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் சனி பகவானின் தாக்கத்திற்கு அச்சப்பட வேண்டிய நிலை ஏற்படாது. சனி பெயர்ச்சி காலங்களிலும் எழரை சனி காலங்களிலும் இவர்கள் மீதான பாதிப்பை குறைத்து அருள் பாலிக்கிறார் சனி.  

6 /10

தனுசு: தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். சனி பகவானும் குரு பகவானும் நட்பு கிரகங்களாக இருப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு இருவரின் கருணையும் கிடைக்கின்றது. சனி பகவானின் வாழ்வில் எப்போதும் அன்பும், மகிழ்ச்சியும், பண வரவும் இருக்கும். சனியின் அருளால் இவர்கள் நினைக்கும் காரியங்கள் அனைத்தும் எந்த வித தடையும் இல்லாமல் நடந்து முடியும்.  

7 /10

மகரம்: மகர ராசியின் அதிபதி சனி பகவான். மகர ராசிக்காரர்களுக்கு வாழ்நாள் முழுதும் சனி பகவானின் அருள் இருக்கின்றது. இவர்களது கடின உழைப்பிற்கு ஏற்ற பலனை சனி பாவானின் அருளால் சற்றும் தாமதமில்லாமல் பெறுகிறார்கள். தொல்லைகள் வந்தாலும் அவை சனியின் அருளால் பனி போல் உருகி விடுகின்றன. அதிகம் சிரமப்படாமல் இவர்கள் பெரிய விஷயங்களை சாதித்து விடுகிறார்கள். 

8 /10

கும்பம்: கும்ப ராசிக்கும் சனி பகவான்தான் அதிபதியாக உள்ளார். இவர்களுக்கு சனி பகவானின் அருள் எப்போதும் இருக்கிறது. சனிபகவானின் அருளால் எப்போதும் பணப் பற்றாக்குறை இவர்கள் வாழ்வில் ஏற்படாது. குறைந்த முயற்சியில் அதிக பலன்களைப் பெறுவார்கள். சனிபகவானின் அருளால் திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். ஏழரை சனி மற்றும் சனி பெயர்ச்சி காலங்களிலும் சனி பகவான் இவர்களை அதிகம் படுத்துவதில்லை. 

9 /10

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.