உதயமாகி நன்மை செய்வார் சனி: இந்த ராசிகளுக்கு இனி அனைத்திலும் ஏற்றம், லாபம்

Shani Uday: ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிரகங்களிலும் இவர் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார்.

Shani Uday: சனி பகவானின் சிறு மாற்றங்களும் பெரிய ஜோதிட நிகழ்வுகளாக கருதப்படுகின்றன. மார்ச் மாதம் 18ஆம் தேதி சனி உதயமாகிறார். தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் அஸ்தமன நிலையில் இருக்கும் அவர் 18ஆம் தேதி உதயமாகவுள்ளார். இதனால் சிலருக்கு சுப பலன்கள் கிடைக்கும், சிலருக்கு பிரச்சனைகள் உருவாகும். சனி உதயத்தால் அனைத்து ராசிகளிலும் (Zodiac Signs) ஏற்படும் தாக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்

 

1 /13

சனி உதயம் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் இந்த காலத்தில் மிகுந்த புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள். கடினமான காரியங்களை எளிதாக செய்து முடிப்பார்கள். போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பணம் வரவு அதிகமாகும். 

2 /13

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் கலவையான பலன்களை அளிக்க உள்ளார். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எனினும், நிதி நிலையில் சில சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்

3 /13

மிதுன ராசிக்காரர்களுக்கும் சனி உதயத்தால் கலவையான பலன்களில் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது.

4 /13

கடக ராசி காரர்கள் சனி உதயத்திற்கு பிறகான காலத்தில் சற்று நிதானமாக இருக்க வேண்டும். பேச்சில் அதிகப்படியான கவனம் தேவை. எதிர்பாராத சண்டை சச்சரவுகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இனிமையாக பேசுவது நல்லது

5 /13

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் பல வித நன்மைகள் அளிக்கும். இந்த காலத்தில் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

6 /13

கன்னி ராசிக்காரர்களுக்கு சனி உதயத்தின் காரணமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் உங்கள் புரிதலும் அன்பும் மேம்படும். குடும்பத்தின் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும்

7 /13

துலா ராசிக்காரர்களுக்கு சனி உதயம் லாபகரமானதாக இருக்கும். பணவரவிற்கான பல வழிகள் பிறக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் துலா ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்

8 /13

சனி உதயம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை கொண்டு வரும். நிதி நிலை நன்றாக இருக்கும். செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

9 /13

தனுசு ராசிக்காரர்களுக்கு சனி உதயத்திற்கு பிறகான காலத்தில் அலைச்சல் அதிகரிக்கலாம். அலுவலகத்தில் வேலை பளு அதிகமாகலாம். நிதானத்துடன் செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி காணலாம்

10 /13

மகர ராசிக்காரர்களுக்கு சனி அருலால் பண வரவு அதிகமாகும். நிதி நிலை மேம்படும், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்சி உண்டாகும். 

11 /13

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி உதயத்தால் பல விதமான நன்மைகள் நடக்கும். நீண்ட நாட்களாக சிக்கி உள்ள பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கும்ப ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகளால் லாபம் உண்டாகும்  

12 /13

சனி உதயத்தின் தாக்கத்தால் நீங்கள் செய்யும் அனைத்து வித பணிகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

13 /13

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.