குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்

Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. சுப கிரகங்களில் ஒருவரான குரு பகவான் இரு நாட்களுக்கு முன்னர் தனது ராசியை மாற்றியுள்ளார். 

Guru Peyarchi Palangal: குரு பகவான் மக்களுக்கு பல நற்பலன்களை அளிக்கிறார். அவரது ராசி மாற்றம், அதாவது குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. குரு மே 1, 2024 அன்று மதியம் 12.59 மணிக்கு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். 12 ராசிகளிலும் குரு பெயர்ச்சியால் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இங்கே காணலாம். 

1 /13

மேஷம்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் செலவுகள் அதிகரிக்கலாம். ஆனால், கவலை வேண்டாம், வருமானமும் அதிகரிக்கும். பயணம் செய்யும்போது கவனம் தேவை. விபத்துகளைத் தவிர்ப்பீர்கள், ஆனால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. வயிற்று நோயால் பாதிக்கப்படலாம்.  அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்க மகிழ்ச்சியாக இருக்கும். 

2 /13

ரிஷபம்: குரு பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணம் செல்வீர்கள். குரு பெயர்ச்சிக்கு பிறகு வங்கிக் கடனின் சுமை குறையத் தொடங்கும், ஏனெனில் உங்கள் நிதி நிலைமை மேம்பட்டு கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்குவீர்கள்.

3 /13

மிதுனம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் செலவுகள் அதிகரிக்கும். பணத்தை சேமிப்பதில் சிரமம் ஏற்படக்கூடும். நிதி நிலை மோசமடையலாம். கடன் தொல்லையில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். சிக்கனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

4 /13

கடகம்:  குரு பெயர்ச்சி காலத்தில் குழந்தைகளின் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயவும் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்சியும் அமைதியும் இருக்கும்.

5 /13

சிம்மம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணி இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. 

6 /13

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி காலத்தில் ஆரோக்கியம் மேம்படும். உடன்பிறந்தவர்களுடன் உறவு நன்றாக இருக்கும். குழந்தைகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். 

7 /13

துலாம்: குரு பெயர்ச்சி காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பயணங்களின் போது கவனம் தேவை. செல்வம் பெருகும். சட்ட சிக்கல்களில் உங்களுக்கு சாதமான முடிவுகள் கிடைக்கலாம். சற்று சவாலான சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

8 /13

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் ஆரோக்கியம் மேன்படும். நிதி நிலை மேம்படும், பண வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். 

9 /13

தனுசு:  குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டில் படிக்கும் எண்ணம் உள்ளவர்களுக்கும், உயர்கல்வி பெற நினைப்பவர்களுக்கும் நேரம் சாதகமாக உள்ளது. அலுவலகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். 

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும். செலவுகளும் அதிகமாக இருக்கும். பொருளாதார நிலை முன்னெறும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்ப சூழல் நன்றாக இருக்கும்.

11 /13

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் அருளால் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும்.

12 /13

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். இந்த காலத்தில்  முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். சட்ட சிக்கல்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.   

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.