குரு பெயர்ச்சியும் சதுர்கிரஹி யோகமும்... பண மழையில் நனையப் போகும் ‘5’ ராசிகள்..!!

Jupiter Transit Effects: மே மாதம்  ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி நிகழ்வினால் சதுர்கிரஹி யோகம் உருவாக உள்ளது.  குரு பகவான் ரிஷப ராசியில் சஞ்சரித்துள்ள நிலையில், ரிஷப ராசியில் நான்கு கிரகங்கள் இணைந்து சதுர்கிரஹி யோகம் உருவாகிறது.

2024 மே மாதத்தில், குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷபத்தில் பெயர்ச்சியாகியுள்ளார். மேலும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷபத்தில் 4 கிரகங்களின் சேர்க்கை உருவாகிறது. இதில் குரு பகவானுடன் புதன், சுக்கிரன் மற்றும் சூரியன் இணைகிறார்கள்.

1 /7

குரு பெயர்ச்சிக்கு பிறகு, மே 10ம் தேதி, புதன் ரிஷபத்திற்கு மாறுகிறார். பின்னர், சூரியன் மே 14ம் தேதி ரிஷப ராசிக்கு செல்கிறார். இதற்குப் பிறகு, மே 19ம் தேதியன்று சுக்கிரனும் ரிஷப ராசிக்கு மாறுகிறார். அதன் காரணமாக சதுர்கிரஹி யோகத்துடன் குரு மற்றும் சுக்கிரன் இணைவதால் கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகும்.இதனால் 5 ராசிக்காரர்கள்அனைத்து வகையான செல்வ வளங்களையும் நன்மைகளையும், வெற்றிகளையும் பெறுவார்கள்.  

2 /7

ரிஷப ராசியில் குரு, சுக்கிரன், புதன், சூரியன் இணைவதால் உருவாகும் சதுர்கிரஹி யோகம் மிகவும் பலனளிக்கப் போகிறது. இந்த காலம் பணம், வியாபாரம், சொத்து மற்றும் குடும்ப விஷயங்களில் நன்மைகளைத் தரும். மேலும், எந்தவொரு பெரிய முதலீடும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வேலையில் தொழிலில் நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கைகளும் உங்களுக்கு வெற்றியைத் தரும்.

3 /7

கன்னி ராசிகளுக்கு குரு பெயர்ச்சியின் காரணமாக ஏற்படும் சதுர்கிரஹி யோகம், வேலை, கல்வி விஷயங்களில் வெற்றியைத் தரும். தொழில் ரீதியாக குரு பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ராசி மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். அதே சமயம் வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

4 /7

விருச்சிக ராசிகளுக்கு குரு பெயர்ச்சியின் காரணமாக ஏற்படும் சதுர்கிரஹி யோகம் நிதி நன்மையைத் தரும். அனைத்து விஷயத்திலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து முழு ஆதரவையும் நிதி நன்மைகளையும் பெறுவீர்கள். பரம்பரை சொத்துக்களையும் பெற வாய்ப்புள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில் திருமணமானவர்கள் தங்கள் புகுந்த வீடுகளில் இருந்து நிதி நன்மைகளைப் பெறலாம். ஆன்மீக பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

5 /7

மகர ராசியினருக்கு குரு பெயர்ச்சியின் காரணமாக ஏற்படும் சதுர்கிரஹி யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ராசி அதிபதியான சனியும் அருள் மழை பொழிவார் என்பதால், உங்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வுடன் நல்ல சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கலாம்.  ஆன்மீக யாத்திரைக்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த ராசிக்காரர்களுக்கு திருமணமாகாதவர்களுக்கும் திருமண வாய்ப்புகள் உள்ளன.

6 /7

மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியின் காரணமாக ஏற்படும் சதுர்கிரஹி யோகம் பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமைக்கான வெகுமதிகளைப் பெறலாம். பணியிடத்தில் சூழ்நிலை மிகவும் சாதகமாக இருக்கும். சகோதரிகள் மற்றும் நண்பர்களால் பொருளாதார ஆதாயம் ஏற்படும். வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம்.

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.