கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, தினமும் இந்த பழங்களை உணவில் சேருங்கள். ஏனெனில் கல்லீரலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கி சுத்திகரிக்கும் ஆற்றல் இந்த பழங்களில் உள்ளது.
ஆப்பிள்களில் இரும்புச் சத்து உள்ளது. மேலும், இதில் பெக்டின் உள்ளது, இது செரிமான அமைப்பில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கிறது.
வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வாழைப்பழம் செரிமானத்திற்கும் உதவுகிறது.
எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கல்லீரலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது கல்லீரலில் இருந்து நச்சுத்தன்மையை அகற்றவும் உதவுகிறது.
திராட்சை சாப்பிடுவது கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது கல்லீரலை நோய்த்தொற்றில் இருந்தும் காக்கிறது. திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.
பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட் பாலிபினால்கள் நிறைந்துள்ளன. பாலிபினால்கள் அடங்கிய பொருட்களை சாப்பிடுவது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பெர்ரி சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது. குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவலை அடிப்படையாகக் கொண்டது. இதை கடைபிடிக்கும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)