உங்களுக்கு பால் அலர்ஜியா? கவலை வேண்டாம், இவற்றிலும் கால்சியம் உள்ளது

கால்சியம் குறைபாடு என்பது ஒரு பிரச்சனை. அது அதிகமானால் உடலில் எலும்பு தொடர்பான பல வித நோய்கள் ஏற்படும். ஒரு வகையில் பார்த்தால், முதுமை அதிகரிப்பதாலும், உணவில் தேவையான கால்சியம் இல்லாததாலும், கால்சியம் குறைபாடு பிரச்சனை அதிகமாகிறது. ஆகையால், உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படாமல் இருக்க உணவில் முழு கவனம் செலுத்த வேண்டும். பால் கால்சியத்தின் முக்கியமான ஆதாரமாக உள்ளது. எனினும், பால் எடுத்துக்கொள்ள பிடிக்காதவர்களும், பால் ஒவ்வாமை உள்ளவர்களும் கவலைப்படத் தேவையில்லை. பால் தவிர, கால்சியம் பிரச்சனையை தீர்க்கக்கூடிய மற்ற விஷயங்களும் பல உள்ளன. கால்சியம் குறைபாடு ஏற்படாமல் இருக்க, பாலைத் தவிர வேறு என்னென்ன உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

 

1 /5

வெள்ளை மற்றும் கருப்பு எள் இரண்டிலும் கால்சியம் அதிகம் உள்ளது. தினமும் 2-4 ஸ்பூன் எள் சாப்பிட்டு வந்தால், பாலை தவிர்த்தாலும் கால்ஷியம் குறைபாடு ஏற்படாது. 100 கிராம் எள்ளில் 1400 மி.கி கால்சியம் இருப்பதால் எள்ளின் பயன்பாடு ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்படுகின்றது. 

2 /5

சோயா நட்சை சிற்றுண்டியாக சாப்பிட்டால், கால்சியம் குறைபாட்டைப் போக்கலாம். 100 கிராம் சோயா நட்ஸில் 240 கிராம் கால்சியம் உள்ளது. இதனுடன் பல்வேறு வகையான கலப்பு நட்ஸ்களையும் சாப்பிடலாம்.

3 /5

பருப்பு வகைகளிலும் கால்சியம் அதிகம் உள்ளது. ராஜ்மா, கொண்டைக்கடலை, உளுந்து ஆகியவற்றில் ஒரு கிளாஸ் பாலில் உள்ள அளவு கால்சியம் உள்ளது. 100 கிராம் பச்சை பயறுகளில் 200 முதல் 250 மிகி கால்சியம் உள்ளது.

4 /5

5-6 கேரட் மற்றும் 50 கிராம் கீரை ஆகியவற்றின் சாறு குடிக்கலாம். இவை இரண்டும் கலந்து சாப்பிட்டால் 300mg கால்சியம் கிடைக்கும். ஒப்பிடுகையில், 200 மில்லி பசுவின் பால் உங்களுக்கு 240எம்.ஜி கால்சியத்தை மட்டுமே கொடுக்கும். 

5 /5

பால் பொருட்களின் பற்றாக்குறையை சமாளிக்க நீங்கள் சோயா பால் எடுத்துக் கொள்ளலாம். பாலின் பற்றாக்குறையை ஒரு நாளில் இரண்டு கிளாஸ் சோயா பால் மூலம் நிறைவு செய்யலாம்.