Green Tea: கிரீன் டீ பிரியர்களே... இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க

கிரீன் டீ : உடல் பருமனை குறைப்பது முதல், உடலை டீடாக்ஸ் செய்வது வரை பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது கிரீன் டீ என்பதில் சந்தேகமில்லை என்றாலும், கிரீன் டீ எடுத்துக் கொள்ளும் போது செய்யும் சில தவறுகள் காரணமாக அதன் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்காமல் போகலாம்.

கிரீன் டீ வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இதனால், உடல் பருமன் விரைவாக குறையும். ஆனால் இதன் ஆரோக்கிய பலனை முழுமையாக அடைய அதை சரியான முறையில் குடிப்பது அவசியம்.

1 /7

கொதிக்கும் நீரில் கிரீன் டீ சேர்ப்பதாலும், கிரீன் டீயை போட்டு கொதிக்க வைப்பதினாலும், அதில் உள்ள நன்மை பயக்கும் சேர்மங்கள் அழிக்கப்பட்டு, கசப்பான சுவையை ஏற்படுத்தும். சுமார் 80-85 டிகிரி செல்சியஸ் தண்ணீரில் கிரீன் டீ தயாரிக்கவும்.

2 /7

சாப்பிட்ட  உடனேயே க்ரீன் டீ குடிப்பதால், உணவில் உள்ள இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதில் இடையூறு ஏற்பட்டு, நாளடைவில் இரத்த சோகை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், உணவு எடுத்துக் கொண்ட பிறகு க்ரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு பின் கிரீன் டீ குடிக்கலாம்

3 /7

கிரீன் டீயில் டானின்கள் உள்ளன, இது வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரிக்கும். இதனால், வயிற்று அசௌகரியம் அல்லது குமட்டலை ஏற்படுத்தும். எனவே, செரிமான பிரச்சனையை தவிர்க்க, க்ரீன் டீயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

4 /7

க்ரீன் டீ பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அதை அதிக அளவில் குடிப்பது தூக்கமின்மை, பதட்டம் மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். தினமும் 2 - 3 கப் கிரீன் டீ உட்கொள்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

5 /7

கிரீன் டீ சில மருந்துகளுடன் வினைபுரியலாம். இதில் இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள், மனச்சோர்வுக்கான மருந்துகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை அடங்கும். நீங்கள் ஏதேனும் சிகிச்சைக்காக மருந்துகளை எடுத்துக் கொள்பவராக இருந்தால், கிரீன் டீயை உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசிக்கவும்.

6 /7

உபயோகப்படுத்திய பையை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொரு முறை க்ரீன் டீ தயாரிக்கும் போதும் புதிய தேநீர் பையைப் பயன்படுத்தவும். இதன் மூலம் சிறந்த சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக பெறலாம்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.