Sweet Potato For Weight Loss: உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மட்டுமல்ல, உடல் எடையை பராமரிக்கவும், குறைக்கவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உதவும்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கை, எப்படி எப்போது உண்ண வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொண்டால், உணவு கட்டுப்பாடு இல்லாமலேயே உடலை சிக்கென்று அழகானதாக மாற்றலாம்.
குளிர்காலத்தில் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். குளிர்காலத்தில் உடலின் வளர்சிதை மாற்றம் குறைவதன் காரணமாக எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. அதோடு குளிர்காலத்தில் பசியும் அதிகரிப்பதால், பெரும்பாலும் அதிகமாக சாப்பிடுகிறோம். அதனால் உடல் எடையை குறைக்க, குளிர்காலத்தில் நாம் உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குளிர்காலத்தில் உங்கள் எடை கூடாமல் இருக்க வேண்டும் என விரும்பினால், உங்கள் உணவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்க்கலாம். எடை இழப்புக்கு பல வழிகளில் உதவும் சர்க்கரை வள்ளிக் கிழங்கின் மகத்துவத்தை தெரிந்து பயன்படுத்தினால் நீங்கள் அழகின் உறைவிடமாக மாறிவிடுவீர்கள்
ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய சூப்பர்ஃபுட்டான சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உடல் எடையை குறைக்கும் அதே நேரத்தில் உடலை வலுவாக்குகிறது. ஏனென்றால், இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கரோட்டினாய்டுகள் மற்றும் தியாமின் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைதுள்ளன
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுவதால் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். இது பசியைக் குறைக்கிறது, இது அதிகப்படியான உணவு உண்பதைத் தடுக்கிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் உடலில் படியும் கூடுதல் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக இருப்பதால், உடலில் ஏற்படும் வீக்கத்தையும், மன அழுத்தத்தையும் குறைக்கிறது. இதனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தொடர்ந்து உண்பதால் எடை கணிசமாக குறைகிறது.
எடை இழப்புக்கு, வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடலாம். அதை காலை உணவில் உட்கொள்ளலாம். இதன் மூலம் மீண்டும் மீண்டும் பசி எடுக்காது. வயிறு நிறைந்திருப்பதால், உணவின் மீதான நாட்டம் குறைவதால், எடை இழப்பு எளிதாகும்.
உடல் எடையை குறைக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாட் செய்தும் சாப்பிடலாம். உண்பதற்கு சுவையாக இருப்பதோடு, உடலுக்கும் பல நன்மைகளைத் தரும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை அடுப்பில் சுட்டு எடுத்துக் கொண்டு, அதை சிறிய துண்டுகளாக வெட்டவும். அதன் பிறகு, அதில் சீரகப் பொடி, கருப்பு மிளகு, கருப்பு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுங்கள்.
உடல் எடையை குறைக்க விரும்பினால், சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரொட்டி செய்து சாப்பிடலாம். மாவு பிணையும் போது வேகவைத்த சர்க்கரை வள்ளியை மசித்து சேர்த்துக் கொள்ளவும். பிறகு வழக்கம் போல சப்பாத்தியாக செய்து சாப்பிட்டால் ருசியும் நன்றாக இருக்கும். நெய் சேர்த்து செய்யும் இந்த சப்பாத்திக்கு கொத்தமல்லி சட்னி நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை