அச்சத்தை கிளப்பும் வைட்டமின் பி12 குறைபாட்டை குணமுப்படுத்தும் சூப்பர் உணவுகள்

Foods For Vitamin B12 Deficiency: நம் உடலின் சீரான செயல்பாட்டிற்கு பல வித வைட்டமின்கள் நமக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. அவற்றில் வைட்டமின் பி12 மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. 

Foods For Vitamin B12 Deficiency: நமது உடல், இதயம் மற்றும் மூளை ஆகியவை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நம் உடலில் போதுமான அளவு வைட்டமின் பி12 (Vitamin B12) இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். வைட்டமின் பி12 சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளைப் பற்றி இங்கே காணலாம்.

1 /8

ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால் எலும்புகள் வலுவிழந்து, மூட்டு வலி பிரச்சனையும் நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

2 /8

வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளாதவர்களுக்கு இரத்த சோகை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகளை பற்றி இங்கே காணலாம்  

3 /8

புரதத்திற்கான சிறந்த ஆதாரமாக சோயாபீன் கருதப்படுகிறது. இது மட்டுமின்றி இதில் வைட்டமின் பி2 ஏராளமாக உள்ளது. வைட்டமின் பி2 குறைபாடு உள்ளவர்கள் சோயாபால், டோஃபு, சோயா சங்ஸ் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.

4 /8

காளான்கள் வைட்டமின் பி12 நிறைந்தவை. இவற்றில் வைட்டமின் பி12 தவிர இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம் ஆகியவும் உள்ளன. இவற்றின் மூலம் உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. 

5 /8

அசைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்ய மீன்களை கண்டிப்பாக அவ்வப்போது தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது வைட்டமின் பி12 இன் நல்ல மூலமாக கருதப்படுகிறது. எனினும் இதைக் குறைந்த அளவிலான எண்ணையில் சமைப்பது நல்லது.

6 /8

முட்டை பொதுவாகவே ஒரு சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. வைட்டமின் பி12 -இன் தினசரி தேவைகளில் 46 சதவீதத்தை முட்டை பூர்த்தி செய்கிறது. இதில் புரதச்சத்தும் அதிகமாக உள்ளது. தினமும் இரண்டு முட்டை சாப்பிடலாம்.

7 /8

சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு ப்ரோக்கோலி வைட்டமின் பி12 -இன் சிறந்த ஆதாரமாக கருதப்படுகின்றது. இது தவிர இதில் வைட்டமின் பி9 அதாவது ஃபோலேடும் அதிகமாக உள்ளது. பச்சை காய்கறிகளில் மிக சத்தான காயாக உள்ள இதில் பல வித ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

8 /8

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.