மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் போக வாய்ப்பு இருக்கா...? கால்குலேட்டர் சொல்வது என்ன?

Mumbai Indians Play Off Chances: மும்பை இந்தியன்ஸ் அணி இன்றும் மீண்டும் தோல்வியடைந்த நிலையில், இன்னும் அந்த அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து இதில் விரிவாக காணலாம். 

நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் 8 தலா லீக் போட்டிகளை விளையாடிவிட்டன. மொத்தம் ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடும். லீக் சுற்று முடிவில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்குச் செல்லும். 

 

1 /7

நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தலா 8 போட்டிகளை விளையாடிவிட்ட சூழலில், டெல்லி 10 போட்டிகளை விளையாடிவிட்டது. 

2 /7

இன்று மாலை நடந்த லீக் போட்டியில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வியை கண்டது. 258 ரன்களை துரத்திய மும்பை அணி கடைசி கட்ட ஓவர்களில் சொதப்பியதால் தோல்வியை தழுவியது. 

3 /7

மும்பை அணி நடப்பு தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 3இல் வென்று, 6 போட்டிகளில் தோற்றுள்ளது. மும்பை அணியின் நிகர ரன்ரேட் -0.261 ஆக உள்ளது. 6 புள்ளிகளுடன் மும்பை அணி 9வது இடத்தில் உள்ளது. இன்னும் 5 லீக் போட்டிகள் மிச்சம் இருக்கும் சூழலில் மும்பை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

4 /7

வாய்ப்புகள் குறைந்துவிட்டது என்றாலும் முற்றிலும் மங்கிவிடவில்லை என்பதே பதிலாக இருக்கிறது. அடுத்த 5 போட்டிகளில் மும்பை அணி நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும், குறிப்பாக அதிக ரன்ரேட் வித்தியாசத்தில்... அதுதான் மும்பை அணியின் பிளேஆப் வாய்ப்பை பிரகாசமாக்கும்.   

5 /7

மும்பை அணி அடுத்துவரும் போட்டிகளில் மொத்தமாக வென்றாலும் அந்த அணி 16 புள்ளிகளையே பெறும். ஒரு போட்டியில் தோற்றாலும் மீதம் உள்ள 4 போட்டிகளில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், எனவே 5 போட்டிகளை வெல்வதே எளிமையான வழி.  

6 /7

மும்பை அணிக்கு அடுத்து லக்னோவுடன் 2 போட்டிகளும், கொல்கத்தா உடன் 2 போட்டிகளும், சன்ரைசர்ஸ் அணியுடன் 1 போட்டியும் உள்ளது. இந்த மூன்று அணிகளும் முதல் 4 இடங்களை பிடிக்க முட்டிமோதி வரும் நிலையில், இந்த அணிகளை முழுவதுமாக தோற்கடிப்பது சற்றே பெரிய விஷயம் எனலாம். இருப்பினும் மும்பை அணி அதற்கு தகுதி வாய்ந்தது எனலாம்.   

7 /7

மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியும் மும்பை அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்லலாம். இன்னும் போட்டிகள் போக போக அந்த கணக்கீடுகள் தெரியவரும், அதன்பின் கையில் கால்குலேட்டரை எடுக்கலாம். ஆனால் தற்போது அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி ஒன்றை மட்டும் குறிவைத்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி விளையாடி ஆக வேண்டும்.